Wednesday, April 22, 2020

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஆர்வம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )இலங்கையின் நெல் உற்பத்தியில்  பெரும் பங்கினை அம்பாறை மாவட்டமே நிறைவு செய்கின்றது. வருடத்தில் பெரும்போகம் , சிறு போகம் என இரண்டு போகங்கள் வேளாண்மை செய்யக்கூடிய விளைநிலங்கள் அதிகளவில் காணப்பட்டபோதிலும் சில இடங்களில் ஒரு போகமே வேளாண்மை செய்கையில் ஈடுபடுத்தப்படுகின்றது. அத்தோடு மேட்டு நிலங்களில் சோளம் உட்பட ஏனைய மரக்கறி பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையான கொரணா வைரசு தாக்கத்திலிருந்து எமது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்தவிதமான தடங்கலுமின்றி  சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் விவசாயிகளுக்கு வயலுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
மழை வெயில் என்று பாராது தம் உடம்பை வருத்தி பொருளாதாரத்தில் மிகவும் தாழ் நிலையில்  தமது ஜீவனோபாயத்தை  மேம்படுத்துவதற்காக அன்றாடம் செத்து மடிகின்ற  எமது நாட்டின் முதுகெலும்புதான் இந்த விவசாயிகள்.. இவர்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது.இந்த கஸ்டமான நிலமையிலும் கூட  விவசாயிகளின் தியாகம் போற்றத்தக்க விடயமாகும்.
. விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு  தமது விவசாய நடவடிக்கைகளை மேலும் வலுவுட்டும் வகையில்  கடந்த காலங்களில் மானிய விலை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உரமானது  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விவசாயிகளுக்கு அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபோகத்திலிருந்து இலவசமாகவே  கமநலசேவை மத்திய நிலையம் விவசாய அமைப்புகளினூடாக  உரத்தினை வினியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. இதே வேளையில் வயல் நிலங்களில் வேளாண்மையுடன் போட்டியிட்டு வளர்ந்து நெல் விளைச்சலை குறைக்கும் களைகளை மனிதவலுவை பயன்படுத்தயும் களைநாசினிகளை விசிறியும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக அதிகளவு பணத்தை செலவிட வேண்டிய நிலமையும் ஏற்படும். அதே போன்று கதிர்பறியும் காலத்தல் நோய்ப்பீடைகளின் தாக்கத்திற்கும்  பயிர்கள் உள்ளாகலாம். விவசாயத்தில் இலாபமும் கிடைக்கலாம் எதிர்பாராத விதமாக நஸ்டமும் ஏற்படலாம்.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது 90 வீதமான வயல்நிலங்களில் விதைப்பு வேலைகள் நிறைவு பெற்றுள்ளது.இம்முறை மாவட்டத்தல் 68,000 ஹெக்டேயரில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.அபுல் கலீஸ் தெரிவித்தார். சிறு போகத்திற்கான நீரை இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்திலிருந்து நீர்ப்பாசண திணைக்களத்தின் மூலமாக வழங்குவதற்கான நடவடிக்கையினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எஸ்.பண்டாரநாயக மேற்கொண்டு வருகின்றார்.
இதே வேளை ஓய்வுதியம் பெறும் விவசாயிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த காலகட்டத்தில் ஜீவனோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெறும் விவசாய ஓய்வுதியம் போதாமை காரணமாக ஓய்வுதியத்தினை 5000 ரூபாவாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுணர் திருமதி அனுராதா ஜகம்பத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவை அமைப்பின் இரண்டாம் கட்ட கொவிட்-19 உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு

(  ஏ.பி.எம்.அஸ்ஹர் )
கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவை அமைப்பின் இரண்டாம் கட்ட கொவிட்-19 உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று ( 22 )இடம் பெற்றது.
அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் தலைவர் அல்ஹாஜ்.இஸட்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில்,  நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தெரிவு   செய்யப்பட்ட 400 வறிய குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் முதற்கட்டம் அண்மையில் இடம் பெற்ற போது 1000 பேருக்கான உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் "சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்" விதை பொதிகள் வழங்கி வைப்பு.( எம்.என்.எம்.அப்ராஸ் )நாடுபூராகவும்  அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட "சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் " வேலைத்திட்டம் -2020 கீழ்  கல்முனை பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விதை பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை  விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று புதன்(21) இடம்பெற்றது.
இதன் போது வீட்டுத் தோட்டம்,மற்றும் நெல் வயல் நிலங்களில் உள்ள வரம்புகளில் பயிர் செய்கைக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய தலைமை விவசாய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா, அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான மறு வயற் பயிர் பாட விதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார்,விவசாய போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி  ,தொழில்நுட்ப உதவியலாளார்
குகழேந்தினி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
மேலும் கல்முனை விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள  வீட்டுத் தோட்டம் செய்கையாளர்கள் 200 பேர் மற்றும் நெல் வயலில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்பு பயிர் செய்கையாளர்கள் 250 பேர்
இதன் மூலம்  நன்மையடையவுள்ளனர் .

கொரனா இடர்காலக் கொடுப்பனவை புத்தளத்தில் வதியும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் வழங்க முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நடவடிக்கை

.

( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின் )நாட்டில் நிலவும் கொரனா தொற்றுக் காரணமாக பல்வேறு அசெளகரியங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு அரசினால் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கோவிட் 19 இடர்கால கொடுப்பனவான 5000 ரூபா நிதியுதவியை மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து தற்பொழுது தற்காலிகாமாக புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் வழங்குவதற்காக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ காதர் மஸ்தான் நடவடிக்கையை மேற்க் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டா மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் சமூர்த்தி ஆணையாளர் நாயகம் ஆகியோரை இன்று (22) சந்தித்து நிலைமைகளை விளக்கியதுடன் இம் மக்களுக்கும் இக் கொடுப்பனவை துரிதமாக வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்க் கொண்டுள்ளார்.

மேற்படி மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களுடன் தற்காலிகமான புத்தளத்தில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு இந் நிவாரணம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களால் தயாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இம்மக்களிடம் வினியோகிக்கப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் வாக்குப்பதிவினைக் கொண்ட 3395 குடும்பங்களும் முல்லைத்தீவில் வாக்குப்பதிவினைக் கொண்ட 280 குடும்பங்களுமாக மொத்தம் 3675 பயனாளிகள் தற்காலிகமாக புத்தளம் மாவட்டத்தில் வசித்துவரும் இத்தருணத்தில் இக் கொடுப்பனவை பெறுவதற்காக இனங்காணப்பட்டுள்ளனர்..

இது தொடர்பில் யாராவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தங்கியிருந்தால் உடனடியாக சமர்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இழந்த தெரிவு செய்யப்பட்ட காரைதீவு, வரப்பத்தாஞ்சேனை, சாய்ந்தமருது, சவளக்கடை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் , முஸ்லிம் பயனாளிகள் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம்

( எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்)


முன்னாள் அமைச்சர் மனோகணேசனின் அம்பாறை  மாவட்ட இணைப்பாளர் கே. ஆர் .றிஸ்கான் முஹமட் தலைமையிலான பொதுநல செயற்பாட்டாளர்கள்  பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயளாளிகளுக்கு உலர் உணவு  பொதிளை வழங்கி வருகின்றனர்.

.இக்குழுவினர்  கடந்த செவ்வாய்க்கிழமை   காரைதீவில் உள்ள பொதுநல செயற்பாட்டாளர்களையும் இணைத்து கொண்டு ஒரு தொகை பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய  நிவாரணங்களை  கையளித்தனர்

Tuesday, April 21, 2020

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மாலையானதும் சிறுவர்கள் பொழுது போக்கிற்காக பட்டம் விடுகின்றனர்

( எம். எம்.  ஜெஸ்மின் )


ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள்ளேயே சிறுவர்கள் அடங்கியிருப்பதால் இன்று பட்டம் விடுவதிலேயே  பொழுதை கழித்துகொண்டிருக்கின்றனர்.
  அம்பாறை  மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில்  மாலை  நேரமாகியவுடன் வானில் பறவை கூட்டங்களை விட பட்டங்களே  அதிகமாக பறப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அதிகமான பட்டங்களை வீடுகளில் தயாரிக்கும் அதே நேரம் ஒரு பட்டத்தின் விலை 500 தொடக்கம் 1500 ரூபா வரை பிரதேசத்தின் பல இடங்களிலும் விற்கப்படுகிறது


.

மட்டக்களப்பு தாழங்குடாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி - கார் விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயம்.

( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின்)மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்  தாழங்குடா கல்வியல் கல்லூரிக்கு முன்பாக  முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

.இவ்விபத்து இன்று மாலை ஊரடங்கு சட்டம்  அமுலில் இல்லாத வேளையில்  இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த காரும் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 முச்சக்கர வண்டியும், காரும் பலத்த சேதத்திற்குள்ளானதுடன் ,
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) இவ்வருட ஏப்ரல் விடுமுறையின் போது ஒழுங்கு செய்திருந்த ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின்))


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) ஏப்ரல் விடுமுறையின் போது  மெற்றோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் மிகப்பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்திருந்த  இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்கள் பங்கேற்கவிருந்த  ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )  சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இப் போட்டித் தொடர் ஏப்ரல் விடுமுறையின் போது  கல்முனை ஸாஹிரா தேவியக்கல்லூரி மைதானத்தில் நொக்கட் முறையில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் கொண்டதாக  .இடம்பெறவிருந்தது.
மஞ்சள் குழுவில்  ஸஹிரியன் 90 அணி , உஸ்பா 91 அணி , ஸஹிரியன் 92 அணி , ஸஹிரியன் 90 ” ஸ் அணி , நொட் அவுட் 92 அணி , பவர் பிளேர்ஸ் 96 அணி , சுப்பர் ஹீரோஸ் 97 அணி , ஸஹிரியன் 98 அணி ஆகியனவும் ,  பச்சை குழுவில் ஸெஸ்டோ 99 அணி , ஸஹிரியன் வை 2 கே அணி , கிளசிக்கல் சீரோ வன் அணி , யுனைடெட்  ஸஹிரியன் 2 ஓ அணி , பும் பும் ஸஹிரியன் அணி , அலியார் ரெஜிமென்ட் அணி , பெச் ஓ  5 அணி  ஆகியனவும் , சிவப்பு குழுவில் ஸஹிரியன் லயன்ஸ் அணி , சுப்பர் வொரியஸ் அணி, கஜபா 08 அணி , கிறிக் 90 அணி , 91  மெட்ஸ் ( குழுமம்) அணி , ரீம் 92 அணி , மெக்ஸ் சாஜர்ஸ் அணி ஆகியனவும் , நீல குழுவில் கிளாஸ் ஒப் தேர்டீன் அணி , லெஜன்ஸ் ஒப் ஸாஹிரியன்  அணி , ஸஹிரியன் விக்கின்ஸ் அணி , 16 ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் வொல்வ்ஸ்  அணி , ரீம் 99 அணி , ரீம் 2 கே அணி ஆகியன பங்கேற்கவிருந்தன. 

 

சாய்ந்தமருது கடல்பரப்பில் ஆழ்கடல் இயந்திரப்படகு சேதத்திற்குள்ளானதால் மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர்கள்.( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜெஸ்மின் )


கடந்த திங்கட் கிழமை அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக ஆழ்கடலில் இயந்திரப்படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபடாமலிருந்த மீனவர்கள் காலையைில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாலை 4.30 மணியளவில் பிடிக்கப்பட்ட மீன்களுடன் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது தரையை அண்மித்த வேளையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட திடீரென்று ஏற்பட்ட பாரிய அலையின் வேகம் காரணமாக இயந்திரப்படகு  தரைக்கு அடித்திச் செல்லப்பட்ட வேளையில் படகில் பயணித்த மீனவர்கள் கரையில் நின்று கொண்டிருந்த கல்முனைக்குடி , மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேச மீனவர்களால் காப்பற்றப்பட்டனர் .இதனால் ஒரு சில மீனவர்கள் காயமடைந்ததுடன் , இயந்திரப்படகு பகுதியாக சேதமடைந்தது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு பிரதேச மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோரின் உதவியுடன் பாரிய  பாரம் தூக்கி இயந்திரம் வரவழைக்கப்பட்டதானால்  இயந்திரப்படகு  பாரிய சேதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது.    
Monday, April 20, 2020

வரிபத்தான்சேனை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு முன்னாள்.அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு

( அஸ்ஹர் இப்றாஹிம்நாட்டில் ஊரடங்கு சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால்  தமது குடும்ப வருமானத்தை இழந்து மிகவும் கஸ்டமான நிலையில் வாழும்  இறக்காமம் , வரிபத்தான்சேனை பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு முன்னாள்.அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் உலர் உணவுப் பொருட்களை  வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை ( 20 ) வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்றது

.முன்னாள்.அமைச்சர்மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்..றிஸ்கான் முகம்மட் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  ஜனனம் அமைப்பின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான வி.ஜனகன் ,  மெஜஸ்ரிக் சிற்றி  நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்   எம். கிறிஸ் ,  வரிப்பத்தான்சேனை யங்  ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர்.முகம்மட் சனுஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.
.அம்பாறை மாவட்டத்தில் உள்ள  ஏனைய  பிரதேசங்களுக்கும் எதிர்வரும்  நாட்களில்   உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கான  ஏற்பாடுகளை செய்து வருவதாக  முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர்.றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்


 

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தால் ( EFO ) சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தெளிகருவிகள் வழங்கி வைப்பு

( அஸ்ஹர் இப்றாஹிம்)கிழக்கு நற்புறவு ஒன்றியத்தினால் ( EFO) கொவிட் 19 எனப்படும் கொரோனா 
வைரஸ் தொற்றிலிருந்து பொது  மக்களை பாதுகாக்கும் நோக்கில் தெளிகருவிகள் மற்றும் கை ஒலிபெருக்கி ஆகியனவற்றை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று  மாலை  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் யு.கே.எம்.முஸாஜித் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் , கல்முனை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் , ஒன்றியத்தின் நிர்வாக பணிப்பாளர் யு.எல்.எம்.பைஸர் , ஒன்றியத்தின் நிதிப் பணிப்பாளர் ஏ.பி.ஜிப்ரி , கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் , கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வாத் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் முஹம்மட் றிஸ்னின் , ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் பணிமனையின் உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்..