Wednesday, February 5, 2020

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா ஏற்பாட்டில்அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய திறந்த வெளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன், முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல.எம். சலீம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடாதின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட சட்டத்தரணி, ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஸி.ஆதம்வாபா, காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் கெளரவ ஏ.எம்.- ஜாஹிர் , காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. டேவிட் , பிரபல சமூக சேவகர் கலாநிதி ஹனீப் ஹாஜி, சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிகாரி, பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி, அமைப்பின் பொது செயலாளர் முஸ்தபா முபாறக் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டதோடு மதரசா மாணவர்களுக்கு புனித அல் - குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
 மேலும் சென்ற மாதம் கிழக்கு இளைஞர்கள் அமைப்பு - ஸ்ரீலங்கா சிம்ஸ் கேம்பஸ் இணைந்து நடத்திய "தலைமைத்துவ மற்றும் உயர் வழிகாட்டல் கருத்தரங்கில் பங்குபற்றிய இளைஞர் , யுவதிகளுக்கான சான்றிதல் வழங்கி வைக்கப்பட்டது.


No comments:

Post a Comment