Wednesday, February 5, 2020

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 72 வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியும், மரநடுகையும்.


( நமது நிருபர்கள்)
 சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தினால் எமது நாட்டின் 72 வது சுதந்திர தினத்தையொட்டிய  சிறப்பு நிகழ்ச்சி சாய்ந்தமருது தோணா முகத்துவாரப்பகுதியில் ( மருதூர் சதுக்கம் ) கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளரான டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரகீப், சாய்ந்தமருது பிரதேச செயலக செயலாளர் ஐ.முகம்மட் றிகாஸ், சாய்ந்தமருது சுயேச்சை குழு தலைவரும், பெமிலி சொய்ஸ் நிறுவன உரிமையாளருமான எம்.எச்.எம். நெளபர் , கல்முனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், கல்முனை பிராந்திய கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் மிஹ்லார், உலக சமாதான தூதுவர் ஏ.ஹிபத்துல் கரீம் , தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா   டாக்டர் சனூஸ் காரியப்பர், தொழிலதிபர்  எம்.ஜ.எம் காலீத், முர்சித் அமீன்,பொறியியலாளர் எம்.ஸீ. கமால் நிசாத் , பியூட்டி பலஸ் உரிமையாளர் சகோதர் மன்சூர் ,இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 தேசிய கொடி ஏற்றுதலின் பின் இரண்டு நிமிடம் நாட்டிற்காக உயிரிழந்த படைவீரர்களுக்கு  மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்  சுத்தமானதும் பசுமையான மருதூர் என்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் நோக்கத்திற்கு அமைய, சுத்தம் செய்யப்பட்டு ஒளியுட்டப்ட்ட முகத்துவார கடற்கரை பிரதேசத்தில் மரக் கன்றுகள் அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டன.


No comments:

Post a Comment