Wednesday, February 5, 2020

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் 26 வது ஆண்டு நிறைவு , வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் அண்மையில் இறையடி எய்திய கழகத்தின் தவிசாளரும் மூத்த ஊடகவியலாளருமான மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான துவாப் பிரார்த்தனை


( அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜபீர்)
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் புரணத்துவம் அடைய கல்வியுடன் மட்டும் நின்று விட முடியாது விளையாட்டுத்துறை  ஆளுமை , தலைமைத்துவப் பயிற்சி , மற்றையவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பாங்கு என்பவற்றை வளர்க்க உதவுகின்றது.
விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் தன்னை வளப்படுத்திக் கொள்வதுடன் தனது சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் கவனம் செலுத்துவது முக்கியமானது. அதற்காக முழுமையாக விளையாட்டில் மட்டும் ஈடுபடுவதென்பது இந்த இடத்தில் பொருத்தமானதொன்றாக கருத முடியாது.
ஒரு கழகத்தின் முன்னேற்றத்தில் அதன் வெற்றியில் பெரும்பங்காற்றும் விளையாட்டு வீரர்களும் அக்கழகத்தை வழிநடத்தும் நிர்வாகிகளும் ஒவ்வொரு வருடமும் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உட்சாகமும் புத்துணர்ச்சியும் ஏற்படும். 
. அந்த வகையில் கல்முனை பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகமான கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் 26  வது ஆண்டு நிறைவு , வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் அண்மையில் இறையடி எய்திய கழகத்தின் தவிசாளரும் மூத்த ஊடகவியலாளருமான மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான துவாப் பிரார்த்தனையும் சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ரோரண்டில்  அண்மையில் இடம்பெற்றது.

கழகத்தின் ஸ்தாபக தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் செயலாளர் சிதத் என் லியனாராய்ச்சி கலந்து கொண்டதுடன் கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
,நிகழ்வின் இறுதியில் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக மெளலவி எம்.எப்.எம்.ஜவ்சி அவர்களினால் துவா பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் கழகத்தின் செயலாளர் பேராசிரியர் எஸ்.எல்.றியாஸ் , உப தலைவர் ஏ.ஆர்.எம்.நியாஸ் , ஆலோசகர் எஸ்.எல்.கலீலுர் றஹ்மான் , பொருலாளர் எம்.எச்.எம்.ஹனீப் ஆகியோர் பிரசன்னமாக இருந்ததுடன்  இலங்கை ரூபவாஹினி அறிவிப்பாளரும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுத்துறை நேர்முக வர்ணனையாளரும் கழகத்தின்  உப தலைவருமான எம்.அன்ஸகான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் செயலாளர் சிதத் என் லியனாராய்ச்சி இம் மாவட்டத்தில் கிறிக்கட் துறைக்கு ஆற்றிவரும் அருஞ்சேவைக்காக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment