Monday, January 20, 2020

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்தி சம்பந்தமான முன்னெடுப்புகள் துரிதம்.



( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்தை இப்பிரதேசத்தின் சிறந்ததொரு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்யும் வகையில் சாய்ந்தமருதில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம்  முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி . சிராஸ் மீராசாஹிப் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்திருந்தனர்.
இம் மைதான விடயமாக அகில இலங்கை மக்கள் கட்சியின் தேசிய  தலைவர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் கவனத்திற்கு  கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்  கொண்டு   வந்ததனையடுத்து அவரின் பணிப்புரைக்கமைய  இன்று  சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்துக்கு  கலாநிதி . சிராஸ் மீராசாஹிப்பின்  இணைப்பாளர்கள் இந்த மைதானத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய  அவசர தேவையாக இனங்கானப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்
இதன் போது சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சம்மேளனம்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியின் பழைமை வாய்ந்த பாலத்திற்கு அருகில் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

( நமது நிருபர்கள்)
சாய்ந்தமருது நகரின் ஊடாக குறுக்கறுத்துச் செல்லும் தோணாவின் மேல் காணப்படும் ஆஸ்பத்திரி வீதி பாலத்திற்கு அருகில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் கழிவு கொட்டும் பிரச்சினைக்கு .நிதந்தர தீர்வு காணும் வகையில்  கடந்த பல இன்று ஓர் விடிவு காலம் பிறந்துள்ளது.
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி பாலம் பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அவ்விடத்தை 
 பொது மக்களின்  பங்களிப்புடன்  ,சாய்ந்தமருது மார்ஸல்  இளைஞர் கழக இளைஞர்கள்  அழகுபடுத்தும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர் எம். வை. எம். ஜஃபர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
 
 பாலத்தின் அருகாமையில் LED மின்குமிழ்கள் பொருத்த்தப்பட்டு  மணல் இட்டு நிரப்பி, இருக்கைகள் அமைக்கும் வேலைத்திட்டமும் இதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர  மேயர் சட்டத்தரணி  ஏ. எம். ரக்கீப் கலந்துகொண்டு இப்பிரதேசத்தில் பொருத்துவதற்கான LED  மின் குமிழ்களை வழங்கி வைத்தார். 
கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம். ஏ. ரபீக்,  ஆசிரியர் எம். ஐ. ஏ. அஸீஸ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்

சாய்ந்தமருது பகுதியில் மற்றுமொரு அழகுபடுத்தும் பணி இன்று ஆரம்பம்.

( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது நகரை  ஊடறுத்துச் செல்லும் தோணா ஆற்றினை மக்கள் பங்களிப்புடன் சுத்தப்படுத்தி, அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக, சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி பாலம் அருகில் அதனை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் இன்று ( 20 )  கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம். ஏ. ரபீக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் பொதுமக்களின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 

வாகனத் தரிப்புக் கட்டணம் தொடர்பில் கல்முனை மாநகர சபை விடுக்கும் அறிவித்தல்

வாகனத் தரிப்புக் கட்டணம் தொடர்பில் கல்முனை மாநகர சபை விடுக்கும் அறிவித்தல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)


கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட எல்லையினுள் பிரவேசிக்கும் வாகனங்கள் தரித்து நிற்பதற்காக அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் வாகனச் சொந்தக்காரர்கள் மற்றும் சாரதிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர சபை விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைப் பிரதேசம் 04 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பகுதியிலும் வியாபார நோக்கத்திற்கல்லாத லொறி மற்றும் டிப்பர் வாகனங்களுக்கு 100 ரூபாவும், வியாபார நோக்கத்திற்குரிய லொறி மற்றும் டிப்பர் வாகனங்களுக்கு 200 ரூபாவும், கார், வேன் மற்றும் அதனையொத்த வாகனங்களுக்கு 50 ரூபாவும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபாவும் அறவிடப்படும்.

இதற்காக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டின் பின்பகுதியில் மாநகர சபையின் இலச்சினை உள்ளிட்ட இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதுடன் கணக்காளரின் கையொப்பமும் இடப்பட்டிருக்கும். அத்துடன் பற்றுச்சீட்டில் தொடரிலக்கமும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட ஒரு வலயத்திலுள்ள ஓரிடத்தில் கட்டணம் செலுத்தினால், அதனைத் தொடர்ந்து மற்றொரு வலயத்திலுள்ள இன்னொரிடத்தில் தரிக்கும்போது கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அன்றைய தினத்தில் கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு வலயத்திலுள்ள இடத்திற்கும் அப்பற்றுச்சீட்டு செல்லுபடியாகும்.

வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவோர் அடையாள அட்டை அணிந்திருப்பதுடன் அவர்களது மேலங்கியில் மாநகர சபையின் இலச்சினை காணப்படும்.

மேற்படி விதிமுறைகள் குறித்து வாகனத் தரிப்பிடங்களை குத்தகைக்கு பெற்று, நடாத்துவோருக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை மீறி எவராவது கட்டணம் அறவிட  முற்பட்டால் வாகனச் சொந்தக்காரர்கள் மற்றும் சாரதிகள் கல்முனை மாநகர சபைக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Sunday, January 19, 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி கையளிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் உத்தியோஸ்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்

( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சபையின் பெரு முயற்சியினால் பீபில் லீசிங் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தின் ( PLC )அஸ் ஸபா நிதிப்பிரிவின் கல்முனை கிளை ஊடாக அந் நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்புடனான (corporate social responsibility _ CSR Project ) நிதியுதவியின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி கையளிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் உத்தியோஸ்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (19 )வைத்தியசாலை அபிவிருத்தி சபை பிரதித் தலைவரும் சம்மாந்துறை மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி டொக்டர் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் பிரதம அதிதியாகவும் , வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் .கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் , பிராந்திய சுகாதார சேவைகள் நிருவாக உத்தியோஸ்தர் எஸ்.எம்.எம்.ஸாபி , பிராந்திய சேவைகள் கணக்காளர் ஐ.எம்.பாரிஸ் , பீபழள் லீஸிங் அன்ட் பைனானஸ் பீ.எல்.சி.நிறுவனத்தின் அல் - ஸபா இஸ்லாமிய நிதிப்பிரிவின் கல“முனை கிளை முகாமையானர் எம்.ஐ.எம்.பைஸால் ,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஏற்றுமதி கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,வைத்திசாலை அபிவிருத்தி சங்க பிரதித்தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் சம்மாந்துறை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எச்.எம்.ஆஸாத் , காரைதீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் டொக்டர் திருமதி .ஜே.சிவசுப்ரமணியம் , , வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் ,வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

கல்முனை மாணவி ஷைரீன் இந்தோனேஷியாவில் தங்கம் வென்று சாதனை; சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இலங்கைக்கு முதலிடம்

கல்முனை மாணவி ஷைரீன் இந்தோனேஷியாவில் தங்கம் வென்று சாதனை;

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இலங்கைக்கு முதலிடம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)



கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாமுல்லாஹ் மௌலானா, இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இச்சாதனையுடன் நேற்று சனிக்கிழமை (18) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தேசிய தொலைகாட்சி ஊடகங்கள் பலவும் அங்கு வருகைதந்து இந்த சாதனை மாணவியை நேர்காணல் செய்திருந்தன.

இந்த சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி கடந்த 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது இறுதிச் சுற்றுக்கு தெரிவான 24 நாடுகளுள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று தங்க விருதை வென்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொறியியல் நிறுவனத்தில் துறைசார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் கொழும்பில் நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இவர் தேசிய மட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார். கொங்க்ரீட் கட்டிடங்களினால் புவியில் ஏற்படும் வெப்பத்தாக்கம் தொடர்பில் இவரது  விஞ்ஞான ஆராய்ச்சி அமைந்திருந்தது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரீன், கடந்த 2012ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்திருந்ததுடன் 2018ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 ஏ சித்திகளைப் பெற்றிருந்தார். அத்துடன் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்து போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் இவர் முதலிடம் பெற்றுள்ளதுடன் இம்முறை தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் திறமை காட்டி வருகின்ற இம்மாணவியின் பல்துறை சாதனைகளுக்காக அண்மையில் கல்லூரி சமூகத்தினரால் 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார். இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாமுல்லாஹ் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு நற்புறவு ஒன்றியத்தின் ( EFO ) வருடாந்த ஒன்று கூடல்



கிழக்கு நற்புறவு ஒன்றியத்தின்  ( EFO ) வருடாந்த ஒன்று கூடலும் 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஒன்றியத்தின் பிரதி தவிசாளர் ரீ.எம்.றிபாய் தலைமையில் சனிக்கிழமை ( 18 ) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் ஒன்றிய சட்டத்துறை பணிப்பானருமான  சட்டத்தரணி எம்.எஸ்.ஏ .றஸாக் அவர்களின் புரண அனுசரணையில் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு EFO T SHIRT வழங்கப்பட்டது..
அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது. பொறியியலாளர் யு.கே.எம்.முஸாஜித் தவிசாளராகவும் , யு.எல்.எம்.பைஸர் நிர்வாக பணிப்பாளராகவும் ,   ஏ.பி. ஜிப்ரி  நிதிப் பணிப்பாளராகவும் ,கலாநிதி ஏ.எம்.றஸ்மி திட்ட அமுலாக்கல் பணிப்பாளராகவும்  , எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஊடகத்துறை பணிப்பாளராகவும் , சட்டத்தரணி எம்.எஸ்.ஏ .றஸாக் சட்டத்துறை பணிப்பாளராகவும்  , ரீ.எம்.றிபாய் உதவி தவிசாளராகவும் , எம்.எம்.ஏ.முபாறக் உதவி நிர்வாக பணிப்பாளராகவும்,  ஏ.எம்.பைஸர் உதவி   நிதிப்பணிப்பாளராகவும் , எஸ்.எம்.பஸீர் உதவி திட்ட அமுலாக்கல் பணிப்பாளராகவும்  ,யு.கே.காலிதீன் , ஏ.எல்.எம்.சலீம் , எம்.ஏ.றபீக் , ஏ.ஜீ.ஏ.ஜாபீர் , ஏ.எல்.எம்.நாபித் , அல் - அமீன் , இஸட் .ஏ.ஜின்னா ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.