Sunday, March 10, 2019

காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே கிழக்கு கரையோரச்சமர்' ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH) நாளை 12ஆம் திகதி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.



( நமது நிருபர்கள்)

கிழக்கு கரையோரச்சமர்'   ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH)  நாளை 12ஆம் திகதி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ளது.
காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே வரலாற்றில் முதற்  தடவையாக இப்போட்டி நடைபெறவுள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இலங்கையின் 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கிடையே இத்தகைய பெருஞ்சமர் (big match ) நடைபெறுகிறது.பாடசாலை மாணவரிடையே  கிரிக்கட் துறையில் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதும் மாணவர்களிடையே  ஜக்கியம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் இதன்நோக்கங்களாகும்.
இதே வேளை   பாடசாலைகளில்  தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குச் செல்லக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்காண்பதும் ஒரு துணைநோக்கமாகும்.
கிழக்கிற்கான பெருஞ்சமர் உவெஸ்லி  மற்றும் விபுலாநந்தா கல்லூரிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த மண் காரைதீவில் அவர் நாமத்துடன் இலங்கும் பாடசாiலை விபுலாநந்தா மத்தியகல்லூரி என்பதாலும் அவர் பயின்ற பாடசாலை கல்முனை உவெஸ்லி என்பதாலும் இவ்விருபாடசாலைகளும் இச்சமரிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் .பிரபாகரன் ,காரைதீவு மத்திய கல்லூரி விபுலாநந்தா அதிபர் தி.வித்யாராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment