Thursday, March 7, 2019

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் பிரதேச கிளை அங்குராப்பண நிகழ்வும் , அமைப்பின் எதிர் கால சமூக சேவைகள் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும்


 ( நமது நிருபர்)
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் பிரதேச கிளை அங்குராப்பண நிகழ்வும்  , அமைப்பின“ எதிர் கால சமூக சேவைகள் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் அண்மையில் இறக்காம பிரதேச அமைப்பாளர் எம்.கே.எம்.நெளசாட் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட்  பிரதம அதிதியதாக கலந்து கொண்டு கலந்து அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றி நிகழ்வில் கலந்து கொண்ட இறக்காமம் பிரதேச இளைஞர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
அமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவரான முகம்மட் தில்சாத்,அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முகம்மட் றியாத்  ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமைப்பின் இறக்காம பிரதேச செயற்குழு தெரிவும் இடம்பெற்றது.
அதில் இறக்காமம் பிரதேச அமைப்பாளராக. எம்.கே.எம்.நெளசாட் மற்றும் அமைப்பின் பிரதேசத்துக்கான செயலாளராக எம்..ஹாதி,  பிரதி அமைப்பாளராக.எம்.எம்.ஹஸீப்,  பிரதி செயலாளராக.எம்.சி.எம்.சாஜித்,
ஊடக இணைப்பாளராக.எம்.முக்சித்  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment