Sunday, March 3, 2019

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.


( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.

இவ்வாறு சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிசாசல் நம்பிக்கையாளர் சபை கடந்த சனிக்கிழமை இரவு ஒழுங்கு செய்திருந்தசாய்ந்தமருது நகரசபை பெறுவதற்கான இறுதிப் போராட்டம்சம்பந்தமான   கலந்துரையாடலின் போது உரையாற்றிய அதன் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

சாய்ந்தமருது மக்களின் தனியான நகரசபை கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்து இன்னும் அதனை பின்தள்ளி இதனை புச்சியமாக மாற்றுவதே இப்பிரதேச அரசியல் தலைமைகளின் புதிய யுக்தியாகும்.

சாய்ந்தமருது மக்களின் போராட்டம் இன்னும் வலுவிழந்து விடவில்லை. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தடையாக இருந்த அரசியல்வாதிகளுக்கு இப்பிரதேச மக்கள் தகுந்த பாடமொன்றினை கற்பித்தனர் . ஆனால் அதனையும் பொருட்படுத்தாது மக்கள் எக்கேடு கெட்டாலும் பராவாயில்லை தமது இருப்பை இந்த கல்முனை பிரதேசத்தில் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிப் பீடமேறலாம் என பகற்கனவு காணும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இது இறுதி அறிவித்தலாக இருக்கும் வகையில்இன்னும் சில தினங்களில்  பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள சாய்ந்தமருதுமாளிகைக்காடு  நம்பிக்கையாளர் சபை திட்டமிட்டுள்ளது.

இந்த சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேறாமல் எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலுக்கும் எந்தவொரு தேர்தல் கட்சிக்கோ அரசியல்வாதிகளுக்கோ வாக்களிக்காமல் சுயேட்சையாக சாய்ந்தமருதில் பிறந்த ஒரு மகனை நிறுத்தி வெற்றபெறுவதன் மூலம் இவர்களையும் இவர்களது கட்சியையும் புற முதுகுகாட்டி ஓட வைக்க எல்லோரும் தயாராக வேண்டும்.

சாய்ந்தமருது மக்களின்  நியாயமான போராட்டத்தில் இணைந்து கொள்ள அயல்கிரமங்களான மாளிகைக்காடு , நிந்தவுர் , நற்பிட்டிமுனை , மருதமுனை , சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 அபிவிருத்தி என்ற மாயையை காட்டி இவ்வுர் மக்களை ஏமாற்றலாம் என சில கையாலாக ஏஜன்டுகளை கைகூலியாக வைத்துக் கொண்டு ஆட எத்தணிக்கும் நாடகங்களுக்கு இந்த சாய்ந்தமருது மக்கள் ஒரு போதும் சோடை போக மாட்டார்கள். அரசியல் வாக்குறுதிகளை இந்த நாட்டின் பிரதமர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை தந்து முடித்துவிட்டார்கள் ஆனபலன் ஒன்றுமில்லை. தொடர்ந்தும் சாய்ந்தமருது மக்களை மடையர்களாகவும் மூடர்களாகவும் வைத்துக் கொண்டு இவர்களின் முதுகில் பயணம் செய்யலாம் என்ற அற்ப ஆசையில் அடிக்கடி கூட்டங்களை நடாத்தி குழுக்களை அமைத்து சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை திசை திருப்பலாம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கல்முனை பிரதேசத்தினை நான்காக பிரிக்க முடியாது . இங்கு இருக்கின்ற சனத்தொகையின் அடிப்படையில் இரண்டாக  மட்டுமே பிரிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் , உள்ளுராட்சி மாகாண சாபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் மிகவும் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில் இப்பிரதேசத்திலுள்ள மக்களுடனும் , பள்ளிவாசல்களுடனும் , தமிழ்தரப்பினரோடும் பேச வேண்டும் என்று மீண்டும் புச்சாண்டி காட்ட நினைப்பது எவ்வளவு மடத்தனமான விடயமாகும்.

சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை மாநகரசபை வேறு தரப்பினர் கையில் சென்றுவிடும் என்ற சாக்குப்போக்கை கூறி இப்போராட்டத்தை இல்லாமல் செய்யலாம் என்ற வகையில் தான் காய் கர்த்தல் இடம்பெறுகின்றது. சாய்ந்தமருது தனியாக பிரிந்தாலும் கல்முனை மாநகரசபை ஆட்சி நீங்கள் விரும்புகின்றவர்களின் கைகளிலே போய் சேரும் என்பதனை கடந்த உள்ளுராட்சி சபை தேர்தல் நிருபித்து காட்டிய பின்னரும் இந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்வதென்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை எம் மூச்சு இருக்கும் வரையில் வழங்க அனுமதிக்கமாட்டோம் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

எனவே குட்ட குட்ட குனிபவனும் மடையன் குனிய குனிய குட்டுபவனும் மடையன் என்பது போல எதிர்வரும் காலத்தில் எமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி ஜனாதிபதிக்கும் இலங்கை அரசதங்கத்திற்கும் , சர்வதேசத்திற்கும் எமது பிரச்சினையை எடுத்துக்காட்டிஎம்மை நாங்களே ஆழவேண்டும்என்ற எண்ணத்தின் அடிப்படையில் இப்போராட்டத்திற்கு ஏற்கனவே தடையாக இருந்த , இணைந்து கொள்வதில் அரசியல் தலைமைகளின் அழுத்தம் காரணமாக தவிர்ந்து கொண்ட சாய்ந்தமருதில் பிறந்த  அனைவரையும் இணைத்துக் கொண்டு எமது இலக்கு தொடவுள்ளது. இதில் தனிப்பட்ட முறையில் யார் யார் பாதிக்கப்பட்டாலும் , அவர்களின் எதிர்கால அரசியல் வாழ்வு கேள்விக் குறியானாலும் அதற்கு எந்த வகையிலும் நாம் பொறுப்பு கூறமுடியாது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான நகரசபை அமைவது சம்பந்தமான அனைவருக்கும் தெளிவாக தெரிந்த விடயம் . இது கிடைப்பதனை தமது சொந்த அரசியல் வாழ்க்கைக்காக பின்தள்ளிச் சென்று எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் அதனை தொடர்ந்து வரும் பொதுத் தேர்தல் என்பவற்றின் போது சாய்ந்தமருது மக்களுக்கு  மீண்டும் இன்னும் வேறு யாரையாவது கூட்டி வந்து தேர்தல் முடிந்த கையுடன் உங்களுக்கு நகரசபை தருகின்றோம் இப்போது எங்களுக்கு அரசியல் அதிகாரம் தாருங்கள் என்று வாக்குறுதியளித்து வாக்கு பிச்சை பெறுவதற்ககன முயற்சியே தற்போது இடம்பெற்று வருக்கின்து.

கடந்த கால பொதுத் தேர்தல்களின் போது சாய்ந்தமருது மண்ணில் பிறந்த மயோன் முஸ்தபா , சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் , ஓய்வுபெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் .எச்..பஸீர் போன்றோருக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்காமல் மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை எம்மண்ணிலிருந்து ஓரம் கட்ட முடியாது அதனை எப்படியாவது காப்பதற்ற வேண்டும் என்ற  எண்ணத்தில் ஊரான் என்றும் பாராமல் இராஜாங்க அமைச்சர் எம்.எச்.எம்.ஹரீஸுக்கு மூன்று முறை வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த சாய்ந்தமருதிற்கு தனியான அலகு வழங்கப்படக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுவது எப்படி நியாயமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்கள் மறைந்ததும் அந்த இடத்திற்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்வதில் முன்னின்று இப்போதய தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் அவர்களை  சாய்ந்தமருது மண்ணில் வைத்து தலைராக்கிய மக்களுக்கு   செய்யும் கைமாறு இதுதானா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

எனவே அறுதியானதும்  இறுதியானதுமான இந்த போராட்டத்தின் மறுவடிவம் எப்படி எவ்வாறு அமையப் போகின்றது என்பதில் என்னால் ஒன்றும் கூற முடியாது அது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. என்று தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது உறுப்பினர்கள் , காரைதீவு பிரதேச சபை மாளிகைக்காடு உறுப்பினர் , உலமாக்கள் , வர்ததகர் சங்க பிரதிநிதிகள் , கல்வியாளர்கள் , இளைஞர் கழக உறுப்பினர்கள் , விளையாட்டு கழகங்களின் பிரதி நிதிகள் , மீனவர்கள் , விவசாயிகள் , பத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment