( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஸ்மாட்
ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் தலைமையில்
அட்டப்பளம் புழு சேன்ட் பீச்
றிசோட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 17 )
இடம்பெற்றது.
இந்
நிகழ்வில் அமைப்பின் எதிர்கால செயற் திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் பிரதேச ரீதியாக
கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள் , சமூக சேவைகள் , சிரமதானம் , போதை ஒழிப்பு , வறுமைக்
கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் , வறிய மாணவர்களுக்கு
பாடசாலை உபகரணங்களை வழங்குதல் , இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்
வழங்குதல் அத்துடன் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி
மாபெரும் கல்வி , தொழில்வழிகாட்டல் கண்காட்சியொன்றினை ஒழுங்கு செய்தல் போன்றவையும்
அங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில்
அமைப்பின் பொதுச் செயலாளர் சப்ராஸ் நஸீர் , அமைப்பின் தேசிய அமைப்பாளர் முஹம்மட் ஸஹான்
, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பீ.எம்.றியாத் , அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்களான இஸ்மாயில் இக்தார் , இம்தியாஸ் மதனி , பிரதேச அமைப்பாளர்களான
ஜே.எம்.சாஜித் அலி ( கல்முனை ) , ஏ.ஆர்.றஸ்வி முஜாட் ( சாய்ந்தமருது ) , எஸ்.எம்.சிராஜுதீன்
( சம்மாந்துறை) , எம்.அர்சலான் ( அட்டாளைச்சேனை ) , ஏ.ஜீ.எம்.அர்சாத் ( காரைதீவு )
, ஏ.எம்.தானிஸ் ( அக்கரைப்பற்று ) , எஸ்.றுஸானந்தன் ( நாவிதன்வெளி ) , ஏ.நிலூஜன் (
பிரதி அமைப்பாளர் , கல்முனை தமிழ்ப்பிரிவு ) , செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச
பிரதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment