Sunday, March 10, 2019

அம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வருகை தந்திருந்த முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய பாடசாலை மாணவர்கள் மூவரை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்




( நமது நிருபர்கள்)

அம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட  பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வருகை தந்திருந்த முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய பாடசாலை மாணவர்கள் மூவரை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள்  இரு மாணவர்கள் அம்பாறையிலுள்ள பிரபல பாடசாலையைச் சேரந்த கடந்த வருடம்  டிசம்பர் மாதம் நடைபெற்ற .பொ..சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவர்கள் அம்பாறையிலுள்ள நவகம்புற , திஸ்ஸபுர மற்றும் ஜயவர்த்தனபுர பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை இழந்த பெண்கள் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து இவ்விடயமாக புகார் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விசாரணை முடியும் வரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியிலுள்ள பாதுகாப்பான பெட்டி உடைக்கப்பட்டே மேற்படி பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் பெட்டியில் பதியப்பட்டுள்ள மாணவர்களின் கைரேகை சம்பந்தமாகவும் பரிசீலனை இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமந்த விஜயசேகர அவர்களின் பணிப்புரையின் பேரில் அம்பாறை பொலிஸ் அதிகாரி  தர்சக சமன் சூரியாராச்சி ,அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த தடுல்ல  மற்றும் அம்பாறை பொலிஸ் நிலைய பதில் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி சோம பாலசூரிய  ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.



No comments:

Post a Comment