Sunday, March 3, 2019

கடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான யாழ்ப்பாணம் முஸ்லீம் சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.



( நமது நிருபர்)

கடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான யாழ்ப்பாணம்  முஸ்லீம் சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை யாழ்ப்பாண மதவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மேலும் இச்சனசமூக நிலைய திறப்பு விழாவில் முஹம்மதியா ஜும்மாபள்ளிவாசல் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான .சி.எம் மூபின்.,யாழ் மாநகர சபை உறுப்பினர் என்.எம் நிபாஹீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment