Sunday, March 3, 2019

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.


 
( நமது நிருபர்கள்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர  கணித  , விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த அந்த குழு மாணவர்களுக்கான இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  இன்று  ( 3 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பொது வைத்தியம் , கண் பரிசோதனை , ஈ.சீ.ஜீ. பரிசோதனை , இரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இக்குழுவில் கல்வி கற்ற உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , இப்பிரதேசத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , பல்துறை நிபுணர்கள் , வங்கி உத்தியோஸ்தர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , தொழில் அதிபர்கள் , தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள் , அரச உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

No comments:

Post a Comment