Thursday, March 21, 2019

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு



( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்முனை பீபிள் லீசிங் கம்பனியில் முகாமையாளர்   எம்..எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். .எல்.எம்.மிஹ்லார் , வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்..எம்.சதாத், பிரதி தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம் பட்டிருப்பு வலய ஆங்கில மொழிப் பிரிவுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஆங்கில நாடக விழா ”


( நமது நிருபர்கள்)

மட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம்  பட்டிருப்பு வலய ஆங்கில மொழிப்  பிரிவுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த  ஆங்கில நாடக விழா   அண்மையில்  களுதாவளை தேசியப் பாடசாலை  ஆராதனை மண்டபத்தில் இணைப்பாளர் பீ.அன்டனி தலைமையில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட 10 பாடசாலைகள் கலந்து கொண்ட  மேற்படி நாடக விழாவில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆங்கில உதவி கல்விப் பணிப்பளர் ஜே...ஜயலத்  பிரதம அதிதியாகவும் , கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராஜா ,  உதவி கல்விப்பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் , மட்டக்களப்பு கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்  என்.பிரசாந்தன், பட்டிருப்பு வலய ஆங்கில உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரஹாஸன் , கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக ஆங்கில விரிவுரையாளர் ஈ.பிரிமேன் வீரசிங்கம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , PPDRO  திட்ட முகாமையாளர் என்.மோகனதாஸ் , பட்டிருப்பு வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இவ்  ஆங்கில நாடக விழாவில் பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட செட்டிப்பாளயம் மகா வித்தியாலயம் , களுதாவளை தேசிய பாடசாலை , பட்டிருப்பு  தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி , ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் , தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம் , பெரிய கல்லாறு மத்திய கல்லூரி , கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் , களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம் , களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
அமைப்புக்குழுவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களான கே.ரூபன் ( செயலாளர் ) , ரீ.விஜயபாஸ்கர் ( பொருளாளர் ) ஆகியோர் அமைப்புக்குழுவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


Sunday, March 17, 2019

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


( நமது நிருபர்கள்)

Baay Boys  பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக்  கழகத்திற்குமிடையே நடைபெற்ற  20 இற்கு 20  கிறிக்கட் போட்டியில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்  கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக்  கழகம் 99  ஓட்டங்களைப்பெற 100 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய  வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 5ஓட்டங்களினால் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

போட்டியின் சிறப்பாட்ட விருதினை கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக்  கழகத்தின் சார்பில் 4ஓவர்கள் பந்த வீசி 20 ஓட்டங்களுக்கு 5  விக்கட்டுக்களைக் கைப்பெற்றிய  எம்.ஸி.ஹாறூன் தெரிவு செய்யப்பட்டார்.


ஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை, ஒலுவில் வாழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை சம்மந்தமான கலந்துரையாடல்



( நமது நிருபர்கள்)

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை, ஒலுவில் வாழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை சம்மந்தமான கலந்துரையாடல் துறைமுக விடுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கப்பல் துறைமுக பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றுப் அவர்களின் தலைமையில்  இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் , பிரதேச சபை தவிசாளர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள்  மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம்



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் தேசிய அமைப்பின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம்  அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் தலைமையில் அட்டப்பளம் புழு சேன்ட் பீச் றிசோட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 17 )  இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அமைப்பின் எதிர்கால செயற் திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் பிரதேச ரீதியாக கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள் , சமூக சேவைகள் , சிரமதானம் , போதை ஒழிப்பு , வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் , வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குதல் , இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்  அத்துடன் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி மாபெரும் கல்வி , தொழில்வழிகாட்டல் கண்காட்சியொன்றினை ஒழுங்கு செய்தல் போன்றவையும் அங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் சப்ராஸ் நஸீர் , அமைப்பின் தேசிய அமைப்பாளர் முஹம்மட் ஸஹான் , அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பீ.எம்.றியாத் , அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்களான  இஸ்மாயில் இக்தார் , இம்தியாஸ் மதனி , பிரதேச அமைப்பாளர்களான ஜே.எம்.சாஜித் அலி ( கல்முனை ) , ஏ.ஆர்.றஸ்வி முஜாட் ( சாய்ந்தமருது ) , எஸ்.எம்.சிராஜுதீன் ( சம்மாந்துறை) , எம்.அர்சலான் ( அட்டாளைச்சேனை ) , ஏ.ஜீ.எம்.அர்சாத் ( காரைதீவு ) , ஏ.எம்.தானிஸ் ( அக்கரைப்பற்று ) , எஸ்.றுஸானந்தன் ( நாவிதன்வெளி ) , ஏ.நிலூஜன் ( பிரதி அமைப்பாளர் , கல்முனை தமிழ்ப்பிரிவு ) , செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச பிரதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


Friday, March 15, 2019

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் இடம்பெற்றது.


( நமது நிருபர்கள்)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மக்கள் பணிமனையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்  இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கும் , இலங்கை  அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி  ஆர்பாட்டத்தில்  பொது மக்களும் இளைஞர்களும்  மிகவும் அமைதியான முறையில். கலந்து கொண்டனர்.


Sunday, March 10, 2019

" பெண்களும் அவர்களது போராட்டங்களும் " எனும் தொணிப்பொருளில் இவ்வாண்டுக்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு



( நமது நிருபர்கள்)

அம்பாறை மாவட்ட இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றாக அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தினரும் இணைந்து " பெண்களும் அவர்களது போராட்டங்களும் " எனும் தொணிப்பொருளில் இவ்வாண்டுக்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு  இன்று AWF அமைப்பின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி  அனூஷியா சேனாதிராஜா தலைமையில் இணைப்பாளர் திருமதி. வாணிசைமன் அவர்களின் நெறிப்படுத்தலுடன் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் .கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.




கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் , 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் , கிறிக்கட் போட்டி மற்றும் எல்லே போட்டியிலும் கல்முனை வலய மட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.



( நமது நிருபர்கள்)

கல்முனை வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பெரு விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி   16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டம் , 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டம்  , கிறிக்கட் போட்டி மற்றும் எல்லே போட்டியிலும் கல்முனை வலய மட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


அம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வருகை தந்திருந்த முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய பாடசாலை மாணவர்கள் மூவரை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்




( நமது நிருபர்கள்)

அம்பாறை வித்தியானந்த தர்ம பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட  பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வருகை தந்திருந்த முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய பாடசாலை மாணவர்கள் மூவரை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள்  இரு மாணவர்கள் அம்பாறையிலுள்ள பிரபல பாடசாலையைச் சேரந்த கடந்த வருடம்  டிசம்பர் மாதம் நடைபெற்ற .பொ..சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவர்கள் அம்பாறையிலுள்ள நவகம்புற , திஸ்ஸபுர மற்றும் ஜயவர்த்தனபுர பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
முச்சக்கர வண்டியினுள் இருந்த பணத்துடன் கூடிய கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளை இழந்த பெண்கள் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து இவ்விடயமாக புகார் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விசாரணை முடியும் வரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியிலுள்ள பாதுகாப்பான பெட்டி உடைக்கப்பட்டே மேற்படி பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் பெட்டியில் பதியப்பட்டுள்ள மாணவர்களின் கைரேகை சம்பந்தமாகவும் பரிசீலனை இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமந்த விஜயசேகர அவர்களின் பணிப்புரையின் பேரில் அம்பாறை பொலிஸ் அதிகாரி  தர்சக சமன் சூரியாராச்சி ,அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த தடுல்ல  மற்றும் அம்பாறை பொலிஸ் நிலைய பதில் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி சோம பாலசூரிய  ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.



காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே கிழக்கு கரையோரச்சமர்' ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH) நாளை 12ஆம் திகதி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.



( நமது நிருபர்கள்)

கிழக்கு கரையோரச்சமர்'   ( Eastern Coastal War) என்ற பெயரில் டெலிகொம் நிறுவன அனுசரணையுடன் கிரிக்கட் பெருஞ்சமர் (BIG MATCH)  நாளை 12ஆம் திகதி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ளது.
காரைதீவு விபுலாநந்தா மத்தியகல்லூரிக்கும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்குமிடையே வரலாற்றில் முதற்  தடவையாக இப்போட்டி நடைபெறவுள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இலங்கையின் 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கிடையே இத்தகைய பெருஞ்சமர் (big match ) நடைபெறுகிறது.பாடசாலை மாணவரிடையே  கிரிக்கட் துறையில் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதும் மாணவர்களிடையே  ஜக்கியம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் சகோதரத்துவத்தை வளர்ப்பதும் இதன்நோக்கங்களாகும்.
இதே வேளை   பாடசாலைகளில்  தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்குச் செல்லக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்காண்பதும் ஒரு துணைநோக்கமாகும்.
கிழக்கிற்கான பெருஞ்சமர் உவெஸ்லி  மற்றும் விபுலாநந்தா கல்லூரிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த மண் காரைதீவில் அவர் நாமத்துடன் இலங்கும் பாடசாiலை விபுலாநந்தா மத்தியகல்லூரி என்பதாலும் அவர் பயின்ற பாடசாலை கல்முனை உவெஸ்லி என்பதாலும் இவ்விருபாடசாலைகளும் இச்சமரிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் .பிரபாகரன் ,காரைதீவு மத்திய கல்லூரி விபுலாநந்தா அதிபர் தி.வித்யாராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.