Saturday, February 23, 2019

சாரணியத்தின் தந்தை "பேடன் பவல்" நினைவு தினம் அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலையில் சாரணிய மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது



சாரணியத்தின் தந்தை "பேடன் பவல்" நினைவு தினம்  அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலையில்  சாரணிய மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம்  பிரதம அதிதியாகவும்  அக்கறைப்பற்று 40ஆம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ 241 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் தலைமையதிகாரி கேணல் விபுல சந்திரசிரி விசேட அதிதியாக வும் கலந்து கொண்டனர்.
இதில் அக்கறைப்பற்று  , கல்முனை  ,சம்மாந்துறை மற்றும்  திருக்கோவில் கல்வி வலயங்களை சேர்ந்த சுமார் 650 சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சாரணிய மாணவர்களுக்கான சிற்றுண்டி, மென்பானம் போன்றவற்றை இலங்கை இராணுவம் பொறுப்பேற்றதுடன் அவற்றை மாணவர்களுக்கு இராணுவத்தினரே பரிமாறினர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment