சிப்பிகுளம்
இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி
அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டு
கழகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.
மேலும்
இப்பகுதி மக்களின் விவசாய கிணறுகளின் திருத்த வேலைகளுக்காக இரண்டு இலட்சம் ரூபா நிதி கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் பாவற்குளம் கிராம அல் மாஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment