கல்முனை மாநகரசபையில்
கடமை புரியும் சுகாதார ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது
பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது
பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் இடம்பெற்ற
மேற்படி மருத்துவ முகாமில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்ஸார் , கல்முனை மாநகரசபை
உறுப்பினர் ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம்.ஏ. றபீக் , சுகாதார பிரிவிற்கான பொறுப்பதிகாரி
எம்.ஏ.அஹ்ஸன் , மேற்பார்வையாளர்களான எம்.ஏ.ஏ.அத்கம் , யு.கே.காலித்தீன் , கல்முனை மாநகர
சபையின் ” ஏ ” வலயத்தில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபடும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment