Monday, February 18, 2019

'போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு


நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு 'போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு  அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளும், அதனை தடுப்பதற்கான வழிவகைகள் மற்றும் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.திருச்செல்வம்  தலைமையில் இடம்பெற்ற  இக்கருத்தரங்கில் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  றம்சீன் பக்கீர் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் .சுதர்சன், நாவிதன்வெளி பிராந்திய சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் .எச்.எம்.ஜாபீர்  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment