Sunday, February 24, 2019

கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டி பெரியகல்லாறு மக்கள் அதனைக் கண்டித்து, அவருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.



மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள், கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டிய, அப்பகுதி மக்கள், அதனைக் கண்டித்து, கல்முனை மாநகர சபை மேயருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய பெரியகல்லாறு பிரதேச மக்களும் குறித்த பிரதேச பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசநாதனும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இவ்விடத்துக்கு வருகை வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பிரதேச செயலகக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென்றார்.


No comments:

Post a Comment