சாய்ந்தமருது
பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இன்று (23) சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் இடம் பெற்றது.
சாய்ந்தமருது
உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்
தலைமையில் இடம்பெற்ற மேற்படி இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச
செயலாளரும் அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நாகிப், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அதிபர் யு.எல். நசார்,
நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜுஹைர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜஃபர், சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சாய்ந்தமருது கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.முனவ்வறா உள்ளிட்ட
கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment