Sunday, February 24, 2019

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சமயபுரம்,கணேசபுரம் மணிபுரம் ஆகிய பகுதிகளுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் விஜயம்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சமயபுரம்,கணேசபுரம் மணிபுரம் ஆகிய பகுதிகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் சென்ற வருட நிதி ஒதுக்கீட்டில் ரூபா முப்பது(30) இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாதைகளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் திரு.மகேந்திரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பார்வையிட்டார்.

அத்துடன் அப்பகுதியில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரினால் ஐந்து இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலம் ஒன்றையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்பட்ட பகுதிகளில் அவசரமாகவும் அவசியமாகவும் செயல்படுத்த வேண்டியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடல்


சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்பட்ட பகுதிகளில் அவசரமாகவும்  அவசியமாகவும் செயல்படுத்த வேண்டியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றி  சாய்ந்தமருது பிரதேச  இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று ( 24 )  இரவு   முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  பிரதி தேசிய அமைப்பாளரும்,மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரின் உத்தியோகபுர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருதின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் பல்துறை சார்ந்தவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி!


இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது:
நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி!
இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள்  கடந்த சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது.
இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது பாணந்துறைகெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைதாகியிருந்ததோடு, வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினரையும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரையும் தனதுட்விட்டர்பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரி பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை ஜனாதிபதி நேரடியாகக் சென்று பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீபும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.


ஸ்ரீலங்கா பெமிலி றிலீப் அமைப்பாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் அவர்களினால் பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் குழாய்க்கிணரொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
” மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் ” எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 71வது சுதந்திர தினத்தையொட்டி சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ்விளையாட்டுக் கழகத்தால் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நடப்பட்ட நிழல்தரும் மரங்களுக்கு தினசரி நீருற்றுவற்கு வசதியாக சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ்விளையாட்டுக் கழகத்தால் குழாய்க்கிணரொன்றினை அமைத்துத் தருமாறு ஸ்ரீலங்கா பெமிலி றிலீப் அமைப்பாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று ( 24) மைதானத்தில் குழாய்க்கிணரொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்குழாய்க்கிணறு அமைத்துத்தருவதில் தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கிய பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் அவர்களுக்கு சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ்விளையாட்டுக் கழகம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டி பெரியகல்லாறு மக்கள் அதனைக் கண்டித்து, அவருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள், கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டிய, அப்பகுதி மக்கள், அதனைக் கண்டித்து, கல்முனை மாநகர சபை மேயருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய பெரியகல்லாறு பிரதேச மக்களும் குறித்த பிரதேச பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசநாதனும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இவ்விடத்துக்கு வருகை வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பிரதேச செயலகக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென்றார்.


கல்முனை மாநகரசபையில் கடமை புரியும் சுகாதார ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம்கல்முனை மாநகரசபையில் கடமை புரியும் சுகாதார ஊழியர்களுக்கான வைத்திய பரிசோதனை முகாம் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ முகாமில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்ஸார் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம்.ஏ. றபீக் , சுகாதார பிரிவிற்கான பொறுப்பதிகாரி எம்.ஏ.அஹ்ஸன் , மேற்பார்வையாளர்களான எம்.ஏ.ஏ.அத்கம் , யு.கே.காலித்தீன் , கல்முனை மாநகர சபையின் ” ஏ ” வலயத்தில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபடும் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருது முஹம்மதிய்யா கலை மன்றத்தின் 32 வது வருட நிறைவும், பாரம்பரிய கலைகளின் அரங்கேற்ற விழாவும்சாய்ந்தமருது முஹம்மதிய்யா கலை மன்றத்தின் 32 வது வருட நிறைவும், பாரம்பரிய கலைகளின் அரங்கேற்ற விழாவும் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலத்தின் கேட்போர்கூடத்தில்  கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
முஹம்மதியா கலைமன்றத்தின் தலைவர் எம்.. அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் .எல்.எம். சலீம் பிரதம அதிதியாகவும், இலங்கை மின்சாரா சபையின் கல்முனை பிராந்திய மின்பொறியியளாலர் எம்.ஆர்.எம். பர்ஹான், மாவட்ட கலாச்சார உத்தியோத்தர் சி.எம். றிம்ஸான், பிரதேச கலாச்சார உத்தியோத்தர் எச்.. சபீக்கா , சாய்ந்தமருது பெமிலிசொயிஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , பாடசாலை அதிபர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..

Saturday, February 23, 2019

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலங்கை சனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துஇலங்கை கிரிக்கெட் அணிக்கு இலங்கை சனநாயக குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துள்ள இந்த முக்கியமான அடைவு குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட அணி வீரர்களுக்கு, ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து, தாய் நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.

மட்டக்களப்பு தபாலக கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு


மட்டக்களப்பு தபாலக கட்டிடத்திற்கான  அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணம் பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதன்போது விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மொளலான, பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் , அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், செயற்பாட்டு பிரதி தபால் அஞ்சல் அதிபர் ராஜித ரணசிங்க, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி , மாவட்ட முகாமையாளர் ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் ,புனர்வாழ்வு ,வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்


சிப்பிகுளம் இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள்  பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஐம்பது ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்  விளையாட்டு கழகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் இப்பகுதி மக்களின் விவசாய கிணறுகளின் திருத்த வேலைகளுக்காக இரண்டு இலட்சம் ரூபா நிதி கெளரவ காதர் மஸ்தான் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் பாவற்குளம் கிராம அல் மாஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சாரணியத்தின் தந்தை "பேடன் பவல்" நினைவு தினம் அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலையில் சாரணிய மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டதுசாரணியத்தின் தந்தை "பேடன் பவல்" நினைவு தினம்  அட்டாளைச்சேனை முஸ்லிம் தேசிய பாடசாலையில்  சாரணிய மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம்  பிரதம அதிதியாகவும்  அக்கறைப்பற்று 40ஆம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ 241 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் தலைமையதிகாரி கேணல் விபுல சந்திரசிரி விசேட அதிதியாக வும் கலந்து கொண்டனர்.
இதில் அக்கறைப்பற்று  , கல்முனை  ,சம்மாந்துறை மற்றும்  திருக்கோவில் கல்வி வலயங்களை சேர்ந்த சுமார் 650 சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சாரணிய மாணவர்களுக்கான சிற்றுண்டி, மென்பானம் போன்றவற்றை இலங்கை இராணுவம் பொறுப்பேற்றதுடன் அவற்றை மாணவர்களுக்கு இராணுவத்தினரே பரிமாறினர் என்பது குறிப்பிடத்தக்கது

சாய்ந்தமருது பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கான இலவச மின்சார வசதி பெற்று கொடுக்கும் நிகழ்வுசாய்ந்தமருதில் இலங்கை மின்சார சபையால் வழங்கப்படும் மின் இணைப்பை பெற  வசதியில்லாமல் இருக்கின்ற குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்களை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய  அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் கௌரவ றிசாட் பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலில் வீட்டு உரிமையாளர்களுக்கான மின்சார இணைப்புக்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று சாய்ந்தமருதிலுள்ள தனது உத்தியோகபுர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனை நிகழ்வும்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இன்று (23) சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் இடம் பெற்றது.

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் .எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்..அஸீஸ் பிரதம அதிதியாகவும்  சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் .எல்.எம்.சலீம், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நாகிப், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அதிபர் யு.எல். நசார், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜுஹைர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜஃபர், சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் .ஆர்.எம்.சாலிஹ், சாய்ந்தமருது கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் .முனவ்வறா உள்ளிட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வடமாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வடமாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ( ADJF ) பெப்ரவரி மாதத்திற்கான கூட்டம் இன்று சனிக்கிழமை  காலை 10.00 மணிக்கு தலைவர் கலாபூசணம் எம்.. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2018/2019ம் ஆண்டுக்கான நிருவாக சபையின் இறுதி மாதக் கூட்டமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.