Tuesday, September 10, 2019

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு


வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு


(நமது நிருபர்)

பண்பு, அறிவு மற்றும்  வலுமிக்க மனிதநேய மாணவ சந்ததியினரை உருவாக்கும் நோக்கில்அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைதேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் கடந்த திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ்.கோனேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்..ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கற்றல் வள நிலையத்தினை திறந்து வைத்தார்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


Friday, May 31, 2019

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை பெறுவதற்கான பற்றுச் சீட்டுக்களை குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது  பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல சமூக சேவை பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது.
சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் இன்று( 31) இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ள  முடியாத இரு குடும்பங்களுக்கு அதற்கான பணத்தை கழகத்தின் நிர்வாக சபை உறுப்பின் ஒருவரால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கி குடிநீர் இணைப்பை பெறுவதற்கான பற்றுச் சீட்டுக்களை குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Wednesday, May 22, 2019

இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளரே புதிய தளபதியாக நியமிக்கப்பட வேண்டும்


மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க  செயற்பாட்டாளரே புதிய தளபதியாக நியமிக்கப்பட வேண்டும்

 காரைதீவு  பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இராணுவத்தின் யாழ்ப்பாண  மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரையே இலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இதை தெரிவித்தார்.
இவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி எமக்கு உறவினரோ அல்லது தனிப்பட்ட நண்பரோ அல்லர். அவரை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது. ஆயினும் அவர் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக இருந்து அம்மாவட்ட மக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்து அறிகின்றபோதெல்லாம் அவர் மீது எமக்கு மரியாதை, மதிப்பு ஆகியன அதிகரித்து கொண்டே செல்கின்றன.
யுத்தத்துக்கு பின்னர் யாழ். மாவட்ட மக்களின் மனங்களை வெல்கின்ற மனித நேய வேலை திட்டங்கள் பலவற்றையும் அவருடைய பதவி காலத்தில் முன்னெடுத்து வருகின்றார். யுத்த காலத்தில் இராணுவத்தால் யாழ். மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரங்களாகக்கூட அவை இருக்க கூடும்.
அரசியல்வாதிகளால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொதுநல வேலை திட்டங்களை காட்டிலும் அவரால் முன்னெடுக்கப்படுகின்ற பொதுநல வேலை திட்டங்கள் பல மடங்குகள் ஏராளம் ஆகும். தென்னிலங்கையையும், புலம்பெயர் தேசங்களையும் சேர்ந்த மனித நேய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நிதி பங்களிப்புகளை பெற்று இம்மாவட்டத்தின் வறிய, வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துகின்ற செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய காலத்தில் பொதுமக்களின் ஏராளமான காணிகள் விடுவித்து தரப்பட்டு உள்ளன. அதே போல கீரிமலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கி கொடுக்கப்பட்டு உள்ளது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இவரின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேய வேலை திட்டங்களை பார்வையிட்டு இவருடைய சேவைகளை பாராட்டி இவருக்கு மகத்தான மனித நேய விருது வழங்கி கௌரவித்து உள்ளனர். நான் அறிந்த வரையில் எமது நாட்டில் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் மனித நேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ள ஒரேயொரு இராணுவ உயரதிகாரி இவராகத்தான் இருக்க முடியும்.
வருகின்ற மாதம் அளவில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக புதியவர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டி உள்ளது. மனித நேயம், மனித உரிமை ஆகியன குறித்து அதிகம் முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற இக்கால கட்டத்தில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரை ஜனாதிபதி புதிய தளபதியாக நியமித்தல் வேண்டும் என்பது எமது பேரவா ஆகும். இலங்கை இராணுவ தளபதியாக பதவி வகிப்பதற்கான அத்தனை தகுதிகள், தகைமைகள் ஆகியன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு உள்ளன என்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். யாழ். மாவட்ட மக்கள் தற்போது இவர் மூலமாக அனுபவித்து வருகின்ற நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது எதிர்பார்ப்பு ஆகும்.


முன்னாள் பிரதியமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அண்மையில் ஹெட்டிப்பொல , கொட்டாம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு


( எம்.ஐ.எம்அஸ்ஹர்)
அண்மையில் ஹெட்டிப்பொல  , கொட்டாம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 230 நிவாரணப் பொதிகளை முன்னாள் பிரதியமைச்சரும்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல் ஹிமா அமைப்பினால் நேற்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குவைத் முஸ்லிம் கெயா சொசைட்டி     (Kuwait Muslim Care Society)
நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான்,பள்ளிவாசல்  பரிபாலன சபையினர் ,  அல்ஹிமா நிறுவனத் தலைவர் அல்ஹாஜ் நூறுல்லாஹ் (நளீமி) உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Tuesday, May 21, 2019

கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் அவர்களின் முயற்சியினால் சுமார் 1 கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் கல்முனைக்குடி – தைக்கா வீதி காபட் வீதியாக புனருத்தானம்.


கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் அவர்களின் முயற்சியினால் சுமார் 1 கோடியே  70 இலட்சம் ரூபா செலவில் கல்முனைக்குடி – தைக்கா வீதி காபட் வீதியாக புனருத்தானம்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும்ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கும்கல்முனை  பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட கல்முனைக்குடி   தைக்கா வீதியின் நிர்மாணப்பணிகளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் .எல்..பாரி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்றுகல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார் , அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி இளைஞர் அமைப்பாளர் .எச்.எச்.எம்.நபார்  உள்ளிட்ட ஐக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தர்கள் , பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 1050 மீற்றர் நீளமான இவ்வீதிக்கு 1 கோடியே 70 இலட்சம்  ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Thursday, March 21, 2019

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு( நமது நிருபர்கள்)

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்முனை பீபிள் லீசிங் கம்பனியில் முகாமையாளர்   எம்..எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். .எல்.எம்.மிஹ்லார் , வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்..எம்.சதாத், பிரதி தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம் பட்டிருப்பு வலய ஆங்கில மொழிப் பிரிவுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஆங்கில நாடக விழா ”


( நமது நிருபர்கள்)

மட்டக்களப்பு பிராந்திய ஆங்கில மொழி ஆதரவு நிலையம்  பட்டிருப்பு வலய ஆங்கில மொழிப்  பிரிவுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த  ஆங்கில நாடக விழா   அண்மையில்  களுதாவளை தேசியப் பாடசாலை  ஆராதனை மண்டபத்தில் இணைப்பாளர் பீ.அன்டனி தலைமையில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட 10 பாடசாலைகள் கலந்து கொண்ட  மேற்படி நாடக விழாவில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆங்கில உதவி கல்விப் பணிப்பளர் ஜே...ஜயலத்  பிரதம அதிதியாகவும் , கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராஜா ,  உதவி கல்விப்பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் , மட்டக்களப்பு கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்  என்.பிரசாந்தன், பட்டிருப்பு வலய ஆங்கில உதவி கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரஹாஸன் , கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக ஆங்கில விரிவுரையாளர் ஈ.பிரிமேன் வீரசிங்கம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , PPDRO  திட்ட முகாமையாளர் என்.மோகனதாஸ் , பட்டிருப்பு வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இவ்  ஆங்கில நாடக விழாவில் பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட செட்டிப்பாளயம் மகா வித்தியாலயம் , களுதாவளை தேசிய பாடசாலை , பட்டிருப்பு  தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி , ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம் , தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம் , பெரிய கல்லாறு மத்திய கல்லூரி , கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் , களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம் , களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
அமைப்புக்குழுவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களான கே.ரூபன் ( செயலாளர் ) , ரீ.விஜயபாஸ்கர் ( பொருளாளர் ) ஆகியோர் அமைப்புக்குழுவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


Sunday, March 17, 2019

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


( நமது நிருபர்கள்)

Baay Boys  பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக்  கழகத்திற்குமிடையே நடைபெற்ற  20 இற்கு 20  கிறிக்கட் போட்டியில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்  கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக்  கழகம் 99  ஓட்டங்களைப்பெற 100 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய  வாழைச்சேனை , ஓட்டமாவடி லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 5ஓட்டங்களினால் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

போட்டியின் சிறப்பாட்ட விருதினை கல்முனை விக்டோறிஸ் விளையாட்டுக்  கழகத்தின் சார்பில் 4ஓவர்கள் பந்த வீசி 20 ஓட்டங்களுக்கு 5  விக்கட்டுக்களைக் கைப்பெற்றிய  எம்.ஸி.ஹாறூன் தெரிவு செய்யப்பட்டார்.


ஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை, ஒலுவில் வாழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை சம்மந்தமான கலந்துரையாடல்( நமது நிருபர்கள்)

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி, அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை, ஒலுவில் வாழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை சம்மந்தமான கலந்துரையாடல் துறைமுக விடுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கப்பல் துறைமுக பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றுப் அவர்களின் தலைமையில்  இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் , பிரதேச சபை தவிசாளர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள்  மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.