Sunday, January 31, 2016

கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.



( கட்டாரிலிருந்து எம்.ஏ.அக்மல் சிபாக் )
கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
கட்டாரிலுள்ள கல்ஹின்ன நலன்புரி அமைப்பு கட்டார் அல் சாத் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 29 ) ஒழுங்கு செய்திருந்த கட்டாரில் தொழில் புரிவோருக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகமும் கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.
8 ஓவர்கள் கொண்ட மேற்படி சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 6.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றியாஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் , ஹக்கீம் தொடர்ச்சியான 4 சிக்ஸ்ஸர்கள் உட்பட 33 ஓட்டங்களையும் , றிபான் 16 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றிஹான் 2 விக்கட்டுக்களையும் ஹமீஸ் , ஆசாத் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றியாஸ் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேரந்த றிஹான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.




No comments:

Post a Comment