Sunday, January 31, 2016

2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.


இந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா ?

2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.
கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தினையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் அனாதரவாக கிடந்த பொதியொன்றினை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எஸ்.எச்.இஹ்ஸான் கண்டெடுத்துள்ளார்.
கண்டெடுத்து அதனை பிரித்து பார்த்த மாணவன் அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இம்மாணவனின் நல்ல செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மாணவர்கள் ஒழுக்கத்தில் மிகவும் நேர்த்தியானவர்கள் இறைவனுக்கு பயந்தவர்கள் என்பதனை இம்மாணவனின் செயற்பாடு எமக்கு உணர்த்தியுள்ளதாக அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் தெரிவித்தனர்.
இம்மாணவனை பாராட்டி இன்று ( 1 ) இடம்பெற்ற பகுதி வாரியான காலைக்கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் இம்மாணவனை வாழத்தியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.



கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.



( கட்டாரிலிருந்து எம்.ஏ.அக்மல் சிபாக் )
கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
கட்டாரிலுள்ள கல்ஹின்ன நலன்புரி அமைப்பு கட்டார் அல் சாத் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 29 ) ஒழுங்கு செய்திருந்த கட்டாரில் தொழில் புரிவோருக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகமும் கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.
8 ஓவர்கள் கொண்ட மேற்படி சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 6.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றியாஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் , ஹக்கீம் தொடர்ச்சியான 4 சிக்ஸ்ஸர்கள் உட்பட 33 ஓட்டங்களையும் , றிபான் 16 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றிஹான் 2 விக்கட்டுக்களையும் ஹமீஸ் , ஆசாத் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றியாஸ் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேரந்த றிஹான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.