Wednesday, September 16, 2015

கல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
கல்முனைத் தொகுதிக்கான பிரதான நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றபோது கல்லூரியின் பழைய மாணவரும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தினார்.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில்  இடம்பெற்ற  ” தலைவர் தின நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் கலந்து கொண்டு .மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினையும் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியை ஜனாபா எஸ்.ஜே.எம்.தௌபீக் நன்றியுரையினையும்  நிகழ்த்தினார்கள்.
நிகழ்வின் இறுதியில் அன்னாருக்காக விசேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றன.












No comments:

Post a Comment