Friday, August 21, 2015

மஹிந்த ராஜபக்ச இரண்டு அல்லது மூன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் சிறை செல்ல நேரிடும் - ஆசாத் சாலி


நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்ளான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிடுகின்றார்.
அத்துடன் தான் எதிர்க்கட்சிப் பதவியை ஏற்கப்போவதில்லைஎன அவர் கூறமுடியாது என்றும், ஏனென்றால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் வகையில் அவருக்கு எதுவித பதவிகளும் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் மஹிந்ததான் எதிர்க்கட்சித தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லைஎன்று கூறியமைத் தொடர்பில் ஆதவன் செய்திக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment