Thursday, August 20, 2015

மிக மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக இழக்கவேண்டியேற்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமே.

”இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் எட்டு ஆசனங்களை எமது கட்சி பெறுமென நாங்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் நான்கு ஆசனங்களை மிக மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக இழக்கவேண்டியேற்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயமே. வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் வாக்குகளினால் நாம் எமது இரண்டாவது ஆசனத்தை இழந்தோம்.
அதேபோன்று புத்தளத்தில் சுமார் 1,500 வாக்குகளினால் எமது ஆசனம் பறிபோனது. மேலும் குருநாகல் மாவட்டத்தில் சுமார் ஐம்பத்து மூவாயிரம் வாக்குகளைப் பெற்ற எமது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் எட்டாம் இடத்தில் இருப்பதோடு சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தனது ஆசனத்தை இழந்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
ரிஷத் பதியுதீன் அவர்கள் எதனை எவ்வாறு கூறினாலும் அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் ஒன்று கிடைக்காவிட்டாலும் அவரது கட்சி தோல்வியடையவில்லை என்றுதான் நான் கூறுவேன்.
அந்த மாவடத்தில் புதிதாக போட்டியிட்டு முஸ்லிம்களின் 30,000 வாக்குகளைப் பெற்றதானது ஓர் அபார சாதனைதான்!

No comments:

Post a Comment