Friday, August 21, 2015

கல்முனையுடாக பொத்துவிலுக்கு கோச்சி வரப்போகுதாம் ....... நல்லாட்சியில் இதுவும் நடக்குமாக்கும்...கிழக்குக் கரை­யோர மக்­களின் மட்­டக்­­ளப்பு முதல் பொத்­துவில் வரையிலான  ரயில் பாதைக் கனவை நிறை­வேற்­று­­தற்­கான துரித நட­­டிக்­கை­களை உரு­வாகும் புதிய அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்­டு­மென கிழக்கு கரையோ பிர­தேச வாழ் மக்கள் கோரிக்கை விடு­கின்­றனர்.
இது குறித்து பிர­தேச மக்கள் தெரி­விப்­­தா­வது,
நாட்டின் தென் பிராந்­தி­யத்தில் ரயில் பாதகைள் விஸ்­­ரிக்­கப்­பட்ட போது, புதிய பாதைகள் அமைக்­கப்­பட்ட போது 23 வரு­டங்­­ளுக்கு முன் திட்­­மி­டப்­பட்ட மட்­டக்­­ளப்பு முதல் பொத்­துவில் வரை­யான ரயில் பாதை­யையும் அமைக்­கு­மாறு கடந்த அர­சாங்­கத்­திடம் பல்­வோறு தரப்­பி­னர்­­ளினால் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன.
ஆனால, அக்­கோ­ரிக்­கைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்­­கொ­லியின் நிலையில் இருந்­தது. அதற்­கான எத்­­கைய நட­­டிக்­கை­­ளையும் கடந்த அர­சாங்­கத்­தி­னனால் முன்­னெ­டுக்­கப்­­­வில்லை.
கடந்த ஜனா­தி­பதித் தோ்தலின்­போதும் நடந்து முடிந்த பொதுத் தோ்தலின்­போதும் இப்­பாதை விஷ்­­ரிப்பு தொடர்­பான வாக்­கு­று­திகள் பிராந்­திய மக்­­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்­­தாக கிழக்கு கரை­யோரப் பிர­தேச மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.
1992ஆம் ஆண்டு காலப்­­கு­தியில் ஆட்­சி­யி­ருந்த .தே.கட்சி அர­சாங்­கத்தில் முன்னாள் அமைச்சர் .ஆர். மன்­சூ­ரினால் இந்த ரயில் பாதை விஷ்­­ரிப்பு நட­­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இருந்தும் ஆட்சி மாற்­றங்கள் இந்­­­­டிக்­கையை கிடப்பில் போட்­டது.
புகை­யிர சேவை போக்­கு­­ரத்துத் துறையில் சௌக­ரி­­மானர். ஆத்­­கைய சௌக­ரி­மிக்க புகை­யி­ரத சேவையை இது வரை காலமும் தங்­­ளுக்கு கிடைக்­காமல் இருப்­பது கவ­லை­­ளிப்­­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.
புகை­யி­ரத சேவையின் மூலம் கொழும்­பி­லி­ருந்து மட்­டக்­­ளப்பு நகர் வரை பிர­யாணம் செய்­கின்ற போதிலும் மட்­டக்­­ளப்பு மட்டும் அம்­பாறை மாவட்ட தூரப் பிர­தே­சங்­­ளுக்கு மட்­டக்­ளப்பு நக­ரி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டி­யி­னூ­டா­கவும் பேருந்­து­­ளி­னூ­டா­­வுமே பய­ணிக்க வேண்­டி­யுள்­­தாக பிர­தேச மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.
உரிய இணைப்பு பஸ்­களும் முறை­யாக நேரத்­திற்கு செயல்­­டாமல் உள்­ளது. இரவு நேர இணைப்பு பஸ்கள் ஓர­ளவு சேவையில் ஈடு­­டுத்­தப்­பட்­டாலும். பகல் நேரங்­களில் கொழும்­பி­லி­ருந்து மட்­டக்­­ளப்பு நகர் வரும் ரயிலில் பயணம் செய்வோர் தூரப் பிர­தே­சங்­­ளுக்குச் செல்­­தற்­கான இணைப்பு பஸ்கள் சேவையில் ஈடு­­டுத்­தப்­­­வில்லை. இதனால் குடும்­பத்­தோடு பய­ணிப்போர் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­­தாகத் தெரி­விக்­கின்­றனர்.
அத்­துடன், இப்­பி­­தே­சங்­களைச் சேர்ந்த அரச ஊழி­யர்­களின் இல­வச ரயில் பயண ஆணைச்­சீட்­டா­னது பய­னற்­றுப்­போ­­தா­கவும் இதற்கு காரணம் இப்­பி­­தேங்­­ளி­லி­ருந்து மட்­டக்­­ளப்பு நக­ருக்கு சென்று ரயில் பயணம் மேற்­கொள்­­தி­லுள்ள சிக்கல் நிலையே என அரச ஊழி­யர்கள் தெரி­விக்­கின்­றனர்.
கிழக்கு கரை­யோரப் பிர­தேசம் வளம்­பெ­று­­தற்கு முக்­கிய தேவை­யாக கரு­தப்­படும் சீரான போக்­கு­­ரத்தை ரயில் சேவையினூடாக பெற்றுக் கொள்ளுவதற்கு மட்டக்களப்பு முதல் பொதுவில் வரையான ரயில்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கும் கிழக்கு கரையோர பிரதேச மக்கள் உருவாகும் இப்புதிய அரசாங்கமாவது இப்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்ளுமென நம்புவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.No comments:

Post a Comment