Thursday, August 20, 2015

அரும்புமீசைதத்துவஞானி என்று கலாநிதி எம்ஏ நுஹ்மானால் வர்ணிக்கப்பட்ட பாவலர் பஸீல் காரியப்பர் - தீரன் நௌஸாத்



அரும்புமீசைதத்துவஞானி என்று கலாநிதி எம்ஏ நுஹ்மானால் வர்ணிக்கப்பட்ட பாவலர் --ஒரு மனிதன் தன் வாழ்வில் சாப்பிடும் ஒரு நெல் மணியைக் கூட ஆகுமான (ஹலால்) வழியில் தேடிக் கொள்ள வேண்டிய சிரத்தையை மிக எளிமைத் தமிழில் ; சொன்ன வரிகள் இவை:-:
“இந்தப் போகம் முடிந்து விட்டது
இனி நாம் புறப்படப் போகிறோம்
இந்த அந்தர விடுதியில் பல விதமான
ஆதரவுகள் செய்திருக்கிறீர்கள்
நன்றி காக்கா.. பரன் கம்புகளும்
வண்டியில்ஏறிக் கொண்டன.

நீங்கள்
விலா வயல்காரர் முளை எறியும் போது
பொது வரம்பைத் தாண்டி சில மணிகள்
எந்தன் வயலிலும் சிந்தியிருக்கலாம்
அவை பல மணிகளைத் தந்துமிருக்கலாம்
ஆதலால் காக்கா.. அவைகளை நீங்கள்
ஹலால் சொல்ல வேண்டும்
வண்டி புறப்படப் போகிறது
சென்று வருகின்றேன்…
அஸ்ஸலாமு அலைக்கும்.! (1998)
-பாவலர் பஸீல் காரியப்பர்.
(ஹலால்.1998)

No comments:

Post a Comment