Friday, August 21, 2015

அரசியல் ஞானி என்று தப்புக்கணக்குப் போட்டு மண்கௌவிய என் தலைவன் அதாவுல்லாவிற்கு உனது ஆதரவாளனின் அன்பு மடல்



தலைவரே நீங்கள் எங்கே தவறினீர்கள்.
இன்னும் சில நிமிடங்களுக்கு நான் உங்களின் ஆதரவாளனாக இருக்க விரும்புகிறேன்.இத்தேர்தலில் நீங்கள் தோற்பது உங்கள் தலைவிதி என்றாலும்,நீங்கள் இத் தேர்தலில் எடுத்த சில சாணாக்கியமற்ற,மூடத்தனமான முடிவுகள்தான் உங்கள் தோல்விக்குக் வழி கோலின என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் இத்தேர்தலில் விட்ட அரசியல் தவறுகள் இவைகள்தான்.
தவறு ஒன்று:இத்தேர்தலின் தன்மையை முதலில் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.இதுதான் நீங்கள் எதிரணியில் இருந்து கேட்கும் முதல் தேர்தல்.மஹிந்தவுக்கு எதிரான மக்கள் அதிகம் இருக்கும் போது இத்தேர்தல் நடைபெறுகிறது.நீங்கள் சென்றமுறை செய்தசில விடயங்கள்எல்லாம் இம்முறை செய்ய முடியாது என்ற கருதுகோளோடு நீங்கள் இத்தேர்தலில் இறங்கியிருக்க வேண்டும்.இப்போதும் மக்கள் என்னோடுதான் என்று நீங்கள் over confident ஆக இருந்து விட்டீர்கள்.
தவறு இரண்டுநீங்கள் வெற்றிலையைத் தேர்ந்தெடுத்தது உங்களின் மிகப்பெரும் தவறு.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இருந்து நீங்கள் பாடம் படித்திருக்க வேண்டும்.நீங்கள் வெற்றிலையில் வாக்கு கேட்டால் உங்கள் எதிரிகள் உங்களை மஹிந்தவோடு அதிகமாக இணைத்துப் பேசுவார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.உங்களைத் தோற்கடிக்கும் முயற்சியில் நானும் அந்த ஆயுதத்தைத்தான் கையில் எடுத்தேன்.நீங்கள் உங்கள் கட்சிச்சின்னத்தில் கேட்டிருக்க வேண்டும்.ஆகக் குறைந்தது மீதமாக வரும் வாக்குகளிலாவது நீங்கள் வென்றிருக்க முடியும்.
தவறு மூன்று:நீங்கள் மகிந்தவோடு இல்லை என்று மக்களுக்குப் புரிய வைக்க பகிரதப்பிரயத்தனம் எடுத்தீர்கள்.ஆனால் அது பலிக்கவில்லை.அம்பாரைக் கூட்டத்திற்கு மகிந்த வருமுன்னர் பேசிவிட்டு இறங்கி வந்தீர்கள்.மைத்திரியின் புகைப்படத்தை போட்டு போஸ்டர் அடித்தீர்கள்.மகிந்த உங்களுக்கு அண்ணனுமில்லை தம்பியுமில்லை என்றீர்கள்.இவையெல்லாம் நீங்கள் மகிந்தவோடு இல்லை என்று மக்களிடம் காட்ட எடுத்த வியூகம்.ஆனால் அந்த வியூகம் போதாது.மக்கள் மனதில் மகிந்தவின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு நடந்த அகோரத்தை காங்கிறஸ்காரர்களும்,மயில் காரர்களும் தங்கள் லாபங்களுக்காக நன்றாக விதைத்து விட்டிருந்தார்கள்.அதனை நீங்கள் அழிக்க முயற்சித்திருக்க வேண்டும்.எவ்வாறென்றால் நீங்கள் உங்கள் அரசியல் மேடைகளில் மகிந்தவை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும்.அவருக்கு நான் நன்றிகடன் படவில்லை,அவர் எனக்கு அண்ணனுமில்லை தம்பியுமில்லை என்பது உண்மையிலேயே போதாது.அவரை நீங்கள் மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தால் மக்கள் நீங்கள் மைத்திரியின் பக்கம் என நம்பியிருப்பார்கள்.
தவறு நான்கு:உங்களுக்கு எத்தனை வாக்குகள் அக்கரைப்பற்றில் விழும் என்று நீங்கள் கணித்த கணிப்பீடு மிகவும் பிழையானது.நான் அக்கரைப்பற்றில் நூறு தொலைபேசி இலக்கங்களை எழுந்தமானமாக எடுத்து அவர்களோடு பேசி ஒரு ஆய்வு செய்ததன் பின்னரே நீங்கள் தோற்பீர்கள் என்று எதிர்வு கூறியிருந்தேன்.அதனால் எனது இம்மாத தொலைபேசி பில் அதிகரித்தது வேறு கதை.உங்கள் ஊரின் வாக்குகளை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பியிருந்தீர்கள்.
தவறு ஐந்து:நீங்கள் காங்கிறஸ்காரர்களின் வாதங்களை சரியாக முறியடிக்கத்தவறி விட்டீர்கள்.காங்கிறஸ் காரர்களும் மகிந்தவோடுதான் இருந்தார்கள் தங்கள் லாபங்களுக்காகத்தான் இறுதிக்கட்டத்தில் விலகினார்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் நீங்கள் ஆழமாகப் பதிக்க முனைந்திருக்க வேண்டும்.உங்கள் மேடைப் பேச்சுகளெல்லாம் காங்கிறசுக்கு சவால் விடுவதாகவே இருந்ததேஒழிய அவர்களை முறியடிப்பதாக இருக்கவில்லை.
தவறு ஆறு: மக்கள் காங்கிறஸின் வருகையை நீங்கள் தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.அவர்கள் வெல்லமாட்டார்கள் என்று மாத்திரமே நீங்கள் சிந்தித்தீர்களே ஒழிய அவர்களுக்கு அக்கரைப்பற்றில் விழும் வாக்க்குகள் உங்களின் வாக்குகள்தான் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.அதனால் நீங்கள் முகாவை எதிர்த்துப் பேசி மக்கள் காங்கிறசை மறைமுகமாக ஆதரித்தீர்கள்.ஆனால் அவர்களால்தான் நீங்கள் தோற்பீர்கள் என்பதை நீங்கள் புரியவில்லை.
தவறு ஏழு:நீங்கள் நிறுத்திய வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமில்லாதவர்கள்.அவர்களால் உங்களுக்கு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்க முடியாது என்பதனை நீங்கள் புரியவில்லை.
தவறு எட்டு: சென்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை வைத்து உங்களுக்கு இரண்டு ஆசனம்தான் வரும் என்பதை நீங்கள் கணிக்கத்தவறிவிட்டீர்கள்.நீங்கள் மூன்று பேரும் பாராளுமன்றத்திற்கு செல்வீர்கள் என்று மக்களிடம் கூறியது பாமரனால் கூட நம்ப முடியாத ஒரு வாதம். அதனை நீங்கள் தவிர்த்திருக்க வேண்டும்.
தவறு ஒன்பது:நீங்கள் வெற்றிலையில் கேட்ட காரணம் சிங்கள வாக்குகளை பெறுவதற்கு என்பது தெரிந்ததே.ஆனால் அம்பாரைத் தொகுதியில் ஒரு சிங்கள அபேட்சகருக்கு வாக்களிக்கும் ஒரு சிங்களவர் இரண்டாவதாகவும் ஒரு சிங்களவருக்கே வாக்களிப்பார்,மூன்றாவதாகத்தான் உங்களைக் கணக்கெடுப்பார். அதனால் சிரியானி உங்களைவிடவும் சிங்கள பிரதேசத்தில் அதிகம் வாக்குகள்தான் பெறுவார் என்பதை கணிக்க நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
தவறு பத்து:நீங்கள் பேஸ்புக்கையும்,வட்ஸப்பையும் மிகவும் இரண்டாம் பட்சமாக எடுத்துவிட்டீர்கள்.உங்களது தோல்விக்கு முக்கிய காரணம் இவை இரண்டும் என்பது எனது கருத்து.நீங்கள் இலத்திரனியல் ஊடகங்களை வைத்து பயன்பெற்றது போதவே போதாது.உங்களுக்கு எதிரான பிரச்சாரம் இலத்திரனியல் ஊடகங்களில் உலா வந்த போது அதற்கு எதிராக நீங்கள் பிரச்சாரம் செய்தது போதாது.உங்களுக்கு எதிரான எங்களைப் போன்றவர்களின் பிரச்சாரம் சூடேறிப் போனபோது உங்கள் ஆதரவாளர்கள் எங்களைக் குறைகூற முயற்சித்தார்களே ஒழிய எங்கள் கருத்தை மறுக்க முயற்சிக்கவில்லை.ஒரு பலமான பேஸ் புக் குழுவை எங்களுக்கு எதிராக நீங்கள் திருப்பியிருக்க வேண்டும்.
தவறு பதினொன்று:இறுதிக்கட்டம் வரைக்கும் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்கள் எல்லோரும் யானைக்கும்,மயிலுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.அவர்களின் மனோநிலைக்கு மருந்து கட்ட நீங்கள் தவறிவிட்டீர்கள்.ஊருக்கு ஒரு எம்பி வேண்டும் என்ற கருத்தை நீங்கள் பிரச்சாரம் செய்தாலும் அது போதவில்லை.காரணம் உங்கள் கவனம் சிங்கள பிரதேசங்களில் இருந்ததே.
தவறு பனிரெண்டு: மஹிந்தவுக்கு புலிகளை அழித்த நன்றிக்கடனுக்காகத்தான் நீங்கள் அவரை ஆதரித்தீர்கள் என்ற உங்கள் பிரச்சாரம் மிகவும் பலவீனமானது.நீங்கள் புலிகளை அழித்த ம்கிந்த என்று கூறும்போதெல்லாம் மக்களுக்கு அளுத்கமையை அழித்த மகிந்த என்றுதான் ஞ்சாபகம் வந்திருக்கும்
.
தவறு பதிமூன்று: நீங்கள் கூடவைத்திருந்த உங்கள் அரசியல் ஆலோசகர்கள் உங்கள் மீதிருந்த நேசத்தினால் நீங்கள் வெல்வீர்கள் என்று கூறினார்களே தவிர உண்மையான நிலவரத்தில் உங்களுக்கு அறிவிரை கூறவில்லை.
உங்கள் தோல்வியால் வந்த விளைவு:உங்கள் அரசியல் வாழ்க்கை இன்றோடு முடிந்தது.அக்கரைப்பற்றை தவத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறீர்கள்.ஊருக்கு ஒருவராவது வேண்டுமே என்று நினைத்து உங்களுக்கு வாக்களித்த பலர் தவத்தோடு இணைவார்கள்.இப்பொழுது தேசியப்பட்டியலைத் தீர்மானிப்பது மைத்திரி என்பதால் உங்களுக்கு அதுவும் கிடைக்காது.அப்படி கிடைப்பது போலிருந்தால் அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.
உங்கள் மன்னிக்க முடியாத தவறு :இவ்வளவு மூடத்தனமாக அரசியலில் முடிவெடுத்துவிட்டு நீங்கள் அரசியல் ஞானி என்று போஸ்டர் அடித்ததுதான் மிகவும் பெரிய தவறு.எல்லாவற்றையும் என்னால் தாங்கிக்கொள்ள முடிந்தது,ஆனால் உங்கள் அரசியல் ஞானி போஸ்டரை மட்டும் என்னால் தாங்க முடியவில்லை.




No comments:

Post a Comment