Thursday, August 20, 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் , அமைச்சருமான றவுப் ஹக்கீமின் சுய ருபம் தேசியப்பட்டியல் பங்கீட்டில் அம்பலமாகியுள்ளது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் , அமைச்சருமான றவுப் ஹக்கீமின் சுய ருபம் தேசியப்பட்டியல் பங்கீட்டில் அம்பலமாகியுள்ளது.
நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அமைச்சர் சென்ற இடமெல்லாம் இந்த ஊருக்கு ஒரு தேசிய பட்டியல் காத்திருக்கின்றது. எனவே மக்கள் அனைவரும் எமது வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என வீர வசனம் பேசிச் சென்றார். இதனை தெயவ வாக்காக நம்பிய மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்துமுள்ளனர்.
ஆனால் இறுதியில் நடந்தது என்ன ... அவரது சகோதரர்  ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மற்றும் எம்.எச்.எம்.சல்மான் ஆகிய இருவருக்குமே தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைதீவு மாவட்டத்தில் இடம்பெற்ற மு.கா.கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஹகிம் அமைச்சர் கூறினார்.வன்னி பாராளுமன்ற பிரநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்றும் சில இடங்களில் தேசிய பட்டியல் தருவதாகவும் தெரிவித்தார்.
இதே போன்று பல இடங்களில் ஹகிம் அமைச்சர் தெரிவித்தார்.ஆனால் தேர்தல் முடிந்த பின்பு கோரிக்கை எல்லாம் கானல் நீராகவே மாறி விட்டது.
பெண்களின் கண்ணிராலும்,ஆண்களின் இரத்ததாலும் உருவாக்கிய கட்சியின் தேசியபட்டியலுக்கு ஹகிம் அமைச்சரின் சகோதரன் டாக்டர் ஹபீஸ்சின் பெயர் சிபாரிசு செய்யபட்டுள்ளதாக இணையதள ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு ஹகீம் அமைச்சரின் குடும்பத்தினர்  செய்த தியாகங்கள் என்ன?இதே போன்று அட்டாளைச்சேனைக்கு ஒரு தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறிதியளித்து அந்த மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக ஹக்கீமை நம்பியிருந்தார்கள். அதே போன்று கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி ,  கல்முனை மாநகர மேயர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் போன்றவர்களின் நிலமைதான் என்ன ......

No comments:

Post a Comment