Wednesday, August 19, 2015

சுய நலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சகலருக்கும் இவர்கள் இருவரினது தோல்வியும் ஒரு சிறந்த பாடமாக அமையட்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகிய  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப கால போராளிகள் இருவரையும் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ச மீது வைத்திருந்த ஆத்திரத்தை மீண்டும் ஒரு முறை தீர்த்துள்ளனர் என்பதை உணர முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குழுவினருடன் இணைந்து நாட்டிலுள்ள முழு முஸ்லீம்களையும் கட்டம் கட்டமாக பழி வாங்கிய நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முழு முஸ்லீம்களுமே கூட்டாக இணைந்து அவரை வீட்டுக்கு அனுப்பிய சரித்திரத்தை மறந்து மீண்டும் அவருக்கொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தபோது அவர்கள் எவ்வளவுதான் சேவை செய்திருந்தும் மக்களின் தீர்ப்பு இறுதியானதும் அறுதியானதுமாகும் என்பதனை இப் பொதுத் தேர“தலில் காட்டிவிட்டார்களா இல்லையா...
சுய நலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சகலருக்கும் இவர்கள் இருவரினது தோல்வியும் ஒரு சிறந்த பாடமாக அமையட்டும்.


No comments:

Post a Comment