Friday, August 14, 2015

அம்பாறை வயல் களத்தில் வேளாண்மை வெட்டு ... ஊருக்குள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே வெட்டுக்குத்து

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை வெட்டு ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் தேர்தல் களத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு தெரிவு வாக்கு பெறுவதில் பெரும் வெட்டுக்குத்து ஆரம்பித்துள்ளது.
தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் றவுப் ஹக்கீம்  பைஸால் காசிம் , ஹரீஸ் , மன்சூர் ஆகிய மூவரையும் அழைத்து உங்களை அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் களம் இறக்குவது என்றால் மூவரும் தனித்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது ... தனித்தனியாக சுவரொட்டிகள் அடிக்கக்கூடாது... தனித்தனியாக விருப்பு வாக்குகள் கேட்டு மக்கடம் போக்கூடாது என்று ஒசியத்து செய்த பின்னரே இவர்கள் மூவரையும் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் மயிலின் ஆட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் தோல்வி நிச்சயிக்கப்பட்ட இந்த டூன்று வேட்பாளர்களும் தனித்தனியாக தனக்கு மட்டும் தான் போட வேண்டும் மற்றைய இருவருக்கும் போடக்கூடாது எனும் பிரச்சார்த்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக்கட்சியன் சார்பில் 8 ஆம் இலக்கத்தில் போட்டியிடும்  சட்டத்தரணி அப்துல் றஸாக்கிற்கு எதிர்பாராத ஆதரவு கல்முஐனக்குடியில் ஒரு சில நாட்டகளாக அதிகரித்துள்ளதனை அவதானிக்கக் கூடியதாவுள்ளது.
இது முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் , குறிப்பாக ஹரீசு்ன் கோபம் கொண்டவர்கள் , தலைவர் றலுப் ஹக்கீமை கண்ணிலே காட்ட முடியாதவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்னர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நிச்சயிக்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் அண்மைக்காலமாக 12 வருட காலமாக கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹரீஸினால் செய்ய முடியாமல் போன மற்றும் ஏனைய இடங்களிலிருந்து கல்முஐனயை நோக்கி வந்த அபிவிருத்தி பணிகள் தடுக்கப்பட்ட விதம் பற்றி பொதுமக்களுக்கு அரசியல் 4ட்டங்களின் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment