Sunday, August 23, 2015

என்னப்பா சொந்தங்களை இப்படிப் பண்றீங்களே....


மன்னிக்க மட்டும் கற்றுக் கொள் ஏனென்றால் , நம்மை ஏமாற்றியவர்கள் நம்மால் நேவிக்கப்பட்டவர்கள்.....


உலகம் உன்னை அறிவதை விட , உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள் - அப்துல் கலாம்


வாருங்கள் மட்டக்களப்பு இரும்பு பாலத்தின் கதை கேட்போம்....

இதுதான் ஆங்கிலேயர்களால் 1925ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ
அன்று நடந்த சுவை யான சம்பவம் ஒன்று
பாலத்தை திற்நதபின்னர் உயர் அதிகாரி கூறினார். இந்தப்பாலத்திலிருந்து குதித்து நீந்திவரும் ஒருவருக்கு அவர் கேட்கும் பரிசை தருவேன் என்றார். காரணம் அந்த நேரத்தில் ஆறு அகலமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இந்தச்சவாலை எவ்வாறு, யார் ஏற்பது, துணிவது என்று அங்குமிங்கும் பார்ததுக் கொண்டிருந்தனர். ஜனத்திரள் யார் அந்த தைரியசாலை ஆண்சிங்கம் என்று யோசிக்கின்றனர். ஒருவரும் முன்வரவில்லை என்றே முடிவுக்கு வந்தனர். இருப்பினும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனப் பாய்ந்து நீந்துகின்றார். ஜனங்களால் நம்படமுடியவில்லை. எவ்வளவோ இளைஞர்கள், வாலிபர்கள், குடும்பஸ்தர்கள் இருந்தும் இந்தமனிதனா என்ற ஆரவாரம் கரகோசம் வானைப் பிளக்கிறது. மனிதர் சற்று பதற்றத்துடனும் களைப்புடனும் மரணப்பயத்துடனும் அரங்கிற்கு வருகின்றார்.
ஆங்கிலேயர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அவர்களுக்க வாழ்த்துவதற்கு இனி வார்த்தையில்லை. அப்படி வாழ்த்து தள்ளுகின்றனர். எல்லாம் முடிந்ததன் பின்னர் அந்த அதிகாரி கேட்கின்றார். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும். இந்த நாட்டை வேணும்னாலும் தருவேன் என்றார்.
அந்த வயோதிபர் கூறினார் இன்னும் களைப்புத் தீராமல் எனக்கு ஒண்ணும் வேணாம். என்னைப் பிடித்துத்தள்ளிய அந்த ஒரு சில மோசமான வார்த்தைகளுடன் அவள்ளமகனை கொஞ்சம் பிடித்துத்தரணும் என்றார். விசயம் தெரிந்ததா, அவரை யாரோ ஒருவன் பிடித்துத் தள்ளியிருக்கின்றார்.

Saturday, August 22, 2015

என்னை அழவைப்பதில்தான் உனக்கு சந்தோசம் என்றால்....


தேர்தலில் தோல்வியுற்ற புத்தளம் நவவிக்கு தேசியப்பட்டியலை விட்டுக் கொடுத்த நல்லமனம் படைத்த ஜெமீல்" தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான அனுமதியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது கட்சிக்கு வழங்கியிருந்தார். அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எம்.எச்.எம்.நவவி தெரிவு செய்யப்பட்டார்.
அதே வேளை தேசிய பட்டியிலில் முதலாவதாக எம்.ஜெமீலின் பெயரே பரிந்துரைக்கபட்டிருந்த நிலையில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தின் அவசியம் கருதி அதனை ஜெமீல், எம்.எச்.எம்.நவவிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தமை ஒரு முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தின் அடித்தளமாகும்.
- அமைச்சர் றிசாத் பதியுதீன் -
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்....

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதிரடி தீர்மானம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார்.
அதே நேரம் ...காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச் சேர்ந்ந்த நவவி நியமிக்கப்படதற்கு இன்று காலை இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்திலும் சூரா கவுன்சில் கூட்டத்திலும் ஏகமனதாக அங்கிகாரம் வழங்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில்; இடம்பெற்ற மாநாட்டில் ...கா சார்பாக தெரிவு செய்யப்பட்ட எம்பிக்களும் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

நாட்டிலுள்ள இனவெறியர்களுக்கு இப்படம் நல்லதொரு பாடம்


கொழும்பு சொகுசு பஸ்களில் சீரழியும் முஸ்லிம் யுவதிகள்அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லீம் இனங்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறது.
இதன் பின்னணி என்ன? இதை சமூக அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினரை இலக்கு வைத்து ஊக்கப்படுத்தப்படும் நடவடிக்கையென அரசியல்வாதிகள் பொதுவாக கூறுவிட்டு இருக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தீபம் வாசகரான ஹசன் புஹாரி என்ற அன்பர் ஒரு சிறிய சம்பவத்தை எமக்கு அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் பெற்றோராவது தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த இந்த சம்பவங்கள் பகிரப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அனுபவம் கீழே.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி கொழும்பு சொகுசு பஸ்சில் செல்ல நேர்ந்தது. பஸ் வண்டிக்குள் ஏறிய போது தலையில் ஸ்காபை சுற்றி அணிந்திருந்த முஸ்லிம் யுவதி ஒருவர் யன்னலோரமாக அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்து இடம் காலியாக இருந்தது.
குறித்த யுவதிக்கு பின்னால் இருவர் அமரக்கூடிய இரண்டு ஆசனங்கள் காலியாக இருக்க, அதில் நான் போய் அவருக்கு பின்னல் யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து லங்கா தீப பத்திரிகையுடன் பஸ்சில் ஏறிய ஒரு பெரும்பான்மை வாலிபர் எனக்கு முன்னால் இருந்த முஸ்லிம் யுவதியின் அருகில் அமர்ந்துகொண்டார். குறித்த வாலிபர் பெரும்பான்மை வாலிபர் என்பதை அவர் கட்டியிருந்த பிரித் நூலின் மூலம் நான் உறுதிபடுத்தி கொண்டேன்.
பயணம் தொடங்கி கடுகண்ணாவை பிரதேசத்தை பஸ்வண்டி அண்மித்த போது குறித்த பெரும்பான்மை வாலிபர் அந்த யுவதியுடன் பேச்சு கொடுக்க துவங்கினார். நான் சிறிது கண் அசந்து விழித்து பார்த்த போது கேகாலை நகரை பஸ் வண்டி அண்மித்து இருந்தது. மட்டுமல்லாமல்முன்னாள் பார்த்த எனக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஸ்காப்பால் தலையை சுற்றி இருந்த யுவதியின் ஸ்காப் அவரது கழுத்தை சுற்றி இருந்தது மட்டுமல்லாமல், அவர் அந்த பெரும்பான்மை நபரின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கிகொண்டிருந்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் இவர்களது சேட்டைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மருதானையில் எனக்கு இறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் அங்கு இறங்கிவிட்டேன் .
குறித்த இருவர் கொழும்பு புறக்கோட்டையில் ஜோடியாக இறங்கினார்களா அல்லது தனியாக பிரிந்து சென்று விட்டர்களா என்பது தெரியவில்லை
பத்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய எனக்கு இந்த சம்பவம் பெறும் ஆச்சர்யமாக இருந்தது. குறித்த சம்பவத்தை நான் எனது மைத்துனருக்கு சொன்னபோது, அவர் இது போன்ற சம்வங்கள் எமது சமூகத்தில் சர்வசதாரனமான விடயமாகிவிட்டது எனவும், அண்மையில் எமது ஊரில் அந்நிய ஆண்களுடன் எமது பெண்கள் தொடர்புவைத்து மாட்டிக்கொண்ட சில சம்பவங்களையும், அவை பள்ளிவாயல் பொலிஸ் விசாரணை வரை சென்ற சம்பவங்களையும் சொன்னார் .
பத்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய எனக்கோ அப்போது நாம் இருந்த எமது சமூக கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும் போது இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
இன்று இனவாதிகள் விடும் அறிக்கைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை இது போன்ற சமூக சீர்கேடுகளுக்கு நாம் வழங்காமல் இருப்பது எமது சமூகத்தின் கிடைத்துள்ள சாபக்கேடாகும்.
எப்போது எமது சமூகம் விழித்து கொள்ளப்போகிறது என்ற ஆதங்கத்துடன் நான் குடியேறியுள்ள நாட்டிற்கு பயணமாகிறேன் …..