Sunday, July 26, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரை ஆதரித்து அம்பாறையில் பொதுக்கூட்டம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்பு




 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கடந்த சனிக்கிழமை அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட ஹெலிக்கொப்டர் மூலம் விளையாட்டு மைதானத்தை வந்ததடைந்ததும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களால் வரவேற்கப்பட்டு  பிரச்சார மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெரும் திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் காணவில்லை.







No comments:

Post a Comment