(அஸ்லம் எஸ்.மௌலானா)
உலகம் போற்றும்
பேரறிஞராகத் திகழ்ந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்
கலாமின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும்
பேரிழப்பாகும்.என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்
தெரவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவியல் துறையில் வழிகாட்டிய ஒரு மாமேதையே விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களாவர்.
இந்தியாவை
வல்லரசு நாடுகள் பட்டியலில் இணைப்பதைக் கனவாகக் கொண்டிருந்த அவர் அதற்காக
தனது அறிவியல் ஆராய்ச்சித் துறையை நாட்டுப்பற்று சிந்தனையுடன் மிகப்பெரும்
தியாகத்துடன் பயபடுத்தி வந்துள்ளார்.
இந்திய
ஏவுகணையின் தந்தையாகவும் சர்வதேசத்தின் முன்னணி விஞ்ஞானியாகவும்
திகழ்ந்த அவர் தனது அறிவு, ஆற்றல்களை நாட்டின் உயர்ச்சிக்காகவும் உலக
மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி வந்துள்ளார்.
தனது
நாட்டில் பிறந்து முழு உலகுக்கும் அறிவொளி பரப்பிய இத்தகைய ஓர் உயர்ந்த
பிரஜையை முஸ்லிம் என்ற வரையறைக்குள் மட்டுப்படுத்தாமல் தமது நாட்டு சொத்து,
அறிவியல் மேதை என்று கருதி இந்தியா தனது குடியரசுத் தலைவராக நியமித்து
அழகு பார்த்ததுடன் அரசியல் ரீதியான பங்களிப்பையும் அவரிடமிருந்து பெற்றுக்
கொண்டது.
No comments:
Post a Comment