Tuesday, July 28, 2015

முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்செயலாக வெற்றிபெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது .அவருக்கு சட்டப்பிரச்சினை இருக்கின்றது. றவுப் ஹக்கீம்

முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்செயலாக வெற்றிபெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது .அவருக்கு சட்டப்பிரச்சினை இருக்கின்றது. இது விடயமாக நான் சட்ட ஆலோசகர்களுடனும் சிரேஸ்ட சட்டத்தரணிகளுடனும் கலந்துரையாடியுள்ளேன்.
இவ்வாறு சம்மாந்துறை விழினையடியில் கடந்த திங்கட் கிழமை ( 27 ) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை மண் நீண்டகாலமாக இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவததை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அம்பாறை மாவட்டத்தில் யானை சின்னத்தில் களம் இறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூரால் மட்டுமே ஏற்படுத்த முடியும். மன்சூரில் பல பிழைகள் இருக்கலாம். அவரோடு பல முரண்பாடுகள் இருக்கலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிழை செய்யக்கூடியவன். அவ்வாறு கோபதாபங்களுக்காக எதிராக வாக்களிப்பதனால் நாம் மீண்டும் வரலாற்று துரோகமொன்றை இந்த மண்ணுக்கு செய்யப்போகின்றோம் என்பதனை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இம்முறை தேர்தலில் என்னை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுமாறு பலர் ஆலோசனை வழங்கினார்கள். அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எந்த சவாலும் இல்லை. கட்சியால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களே போதும். அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான வியுகங்களை நான் ஏற்கனவே வகுத்து விட்டேன்.
ஒருமுறை நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. கண்டி மாவட்டத்தில் கட்சிப் போராளிகள் 10 பேரை பலிகொடுத்த அந்த வேளையிலும் கூட அப்போது அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டிப்போட்டுவிட்டு மரச்சின்னத்தில் போட்டியிட்டு மூன்று பிரதிநிதித்துவத்தை பெற்றோம் ஆனால் பின்னர் அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து விட்டனர். கட்சியோடும் வேட்பாளர் மன்சூரோடும் முரண்பட்டிருந்த கட்சியை விட்டு போன , விலகி போகவிருந்த கட்சியின் முக்கிய போராளிகளுடன் கதைத்து அவர்களை ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். நான் திட்டவட்டமாக சொல்கின்றேன் இனிமேல் கட்சியின் போராளிகள் எவரும் மாற்றுக் கட்சிக்காரர்களிடம் போகமாட்டார்கள் என்று.
இப்போது நாங்கள் ஆட்சியில் இருக்கின்றோம். எதிர்காலத்தில் பலமான  ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம். அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிகளாக மாறும் வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்திலே முகம் மோசமாக இருக்கின்றது என்பதற்காக மூக்கை அறுத்துக் கொள்ளாதீர்கள்..
தலைவர் அஸ்றபின் மறைக்கு பின்னர் மர்ஹும் அன்வர் இஸ்மாயிலைத் தவிர எவரும் முஸ்லிம் காங்கரஸ் கட்சியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. அந்த வரலாற்றுத் தவறை மீண்டும் இச் சம்மாந்துறை மண் செய்யக்கூடாது. கடந்த எட்டு வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவததை இழந்து நிற்கின்ற சம்மாந்துறைக்கு கிடைத்திருக்கின்ற இந்த பெரும் சந்தர்ப்பததை பிரிந்து நின்று இல்லாமல் செய்து விடாதீர்கள்.
இப்போது  அமைச்சர் றிஸாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் போட்டியிடுவது அவர்கள் பிரதிநிதித்துவததை பெறுவதற்காக அல்ல இம்மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதனை தடுப்பதற்கும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்காகவுமே. இந்த காரியத்திற்கு இம்மாவட்ட முஸ்லீம்கள் துணை போகக்கூடாது.
சம்மாந்துறைக்கு கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில் பல இழுபறிகள் ஆரம்பத்தில் ஏற்பட்டது. மஸுறா சபையுடன் கலந்துரையாடிய பின்னர் மன்சூரை வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதும் அவரின் பதவி மற்றும் சகல பொறுப்புகளிலுமிருந்து விலகிக் கொள்ளுமாறு ராஜினமாக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளேன். இந்தப் பந்தயத்தில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் கட்சித் தலைமையின் வேண்டுகோளின் பேரிலேயே இதனைச் செய்துள்ளார்.
இப்போது அம்பாறை மாவட்டத்திலே ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினது வாக்குப் பலத்தோடு அறுதிப்பெரும்பான்மை வாக்குளால் வெற்றிபெற்று நான்கு ஆவனங்களைப் பெறப்போகின்றது. அதில் எமது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மூவர் வெற்றி பெறுவார்கள்.அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி எனும் பஸ் வண்டி ஓடுமேயானால் அதன் சாரதியாகவும் நடத்துனராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பானரே இருப்பார் என்பதை தெட்டதெளிவாக கூறிக் கொள்கின்றேன்.
என்று குறிப்பி்டடார்.

No comments:

Post a Comment