Tuesday, July 28, 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையொன்று இன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது கொம்டெக் கல்வி நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் றிஸ்தி சரிப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான .எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியின் முக்கியத்துவம் பயிற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
முஸ்லீம்களும் இன ஒருமைப்பாடும் எனும் தலைப்பில் இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையில் தகவல் திரட்டுதல் , பொதுமக்கள் அபிப்பிராயம் அறிதல் , கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளுதல் , நடைபெற்ற அநியாயங்களைப்பற்றி பரிசீலிப்பது , இன ஒற்றுமைக்கு முஸ்லீம்களின் பங்களிப்பை கண்டறிதல் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன்சிறந்த தலைமைத்துவம் எனும் தலைப்பில் குழுநிலை கலந்துரையாடலும் , இன்றைய இளைஞர்களும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தலைமைத்துவ பண்புகளும் , இளைஞர்களும் அவர்கள் எதிர்நோக்கும் சமகால சவால்களும் எனும் தலைப்பில் பிரபல்யம் பெற்ற விரிவுரையாளர்களினால் விரிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன





No comments:

Post a Comment