Wednesday, July 29, 2015

அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் எதிரணியினரை தாக்கும் படலம் ஆரம்பம்



அக்கரைப்பற்று 6 ஆம் குறிச்சியைச்சேர்ந்த சலீம் என்பவர் அக்கரைப்பற்று அரசியடியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை  தேசிய காங்கிரஸ் அதாவுல்லாஹ் அணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு அக்கரைப்பற்று தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இதனை அடுத்து கபே அமைப்புக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கபே அமைப்பின் கண்காணிப்பாளர் அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு சென்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இன்றுமாலை கபே அமைப்பின் ஊடக அறிக்கையில் உட்படுத்தப்படவுள்ள இச்சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றுக் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: சென்ற தேர்தல்களைப்போல் அல்லாது இம்முறை தேர்தல் சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி மொழிவழங்க்கப்பட்டுள்ள்து. எனவே தேர்தல் வன்முறைகளை உரிய இடத்துக்கு உடனுக்குடன் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment