Sunday, July 26, 2015

போகிற போக்கை பார்த்தால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும் இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அபேட்சகர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பைஸால் காசிம் , எச்.எம்.எம்.ஹரீஸ் , முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார எம்.ஐ.எம்.மன்சூர் ஆகிய மூவரும் ஒன்றாகவே தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்ல வேண்டும் , மூவரும் ஒரே வகையான போஸ்டர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். தனித்தனியாக சென்று வாக்கு வேட்டை நடாத்த முடியாது என கட்சியின் தலைமை பணித்துள்ளதால் தலைமைக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குளளேயே முடங்கிக் கிடக்கும் நிலையொன்று தோன்றியுள்ளதாக ஆரதரவாளர்கள் கடுமையான விரக்தியில் இருக்கின்றார்கள்.
தமது கட்சியை எதிர்ததப் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்குப் பலத்தை அதிகரிப்பதனால் தமக்கு இப்படியான ஒரு நிலமை ஏற்பட்டுள்ளமை தமது தோல்விக்கு இப்போதே கட்சியின் தலைவர் ஆப்பு வைத்து விட்டதாக அங்கலாயிக்கின்றனர்.
கல்முனைக்கு ஒருவரும் , சம்மாந்துறைக்கு ஒருவரும் , நிந்தவுருக்கு ஒருவரும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மருதமுனை , சாய்ந்தமருது , அட்டாளைச்சேனை , ஒலுவில் , இறக்காமம் , அக்கரைப்பற்று , பொத்துவில் , நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் ஐக்கிய தேசியக்கட்சியின் மாய வலைக்குள் சிக்க வைத்து கண்டியிலிருந்து தான் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக சென்று கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதே இதன் உள்நோக்கமாகும்.
போகிற போக்கை பார்த்தால் மூன்று வேட்பாளர்களும் இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

No comments:

Post a Comment