Friday, July 24, 2015

நெகிழ்ந்து விரியுங்கள் மனங்களே

தயவுடன் வேண்டுகிறேன்
ஒருவரையும் எரித்து விட வேண்டாம்
எத்தகைய அரசியல்வாதியாய்
இருந்த போதும்

அந்த நச்சுப் புகையை நாம் ஏன்
சுவாசிக்க வேண்டும்
ஒரு அச்சுப்பிழையில் தலையெழுத்து
அடங்குவதில்லை அன்றோ

அவர்களாக சாவர்
எதை அள்ளிக் கட்டிக்கொண்டு போவர்

பாவம் செய்து கொண்டு
பிறரை, பார்த்து ரசிக்க செய்யும்
சாபம் ஒன்றுள்ளதோ

நொந்த மனங்களே கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்
அந்த அருளாளன் அறிவான்
அவரவர்க்கு எது தகுமென

எந்த அரசியல்வாதியையும்
எரித்து விட வேண்டாம்
தயவுடன் வேண்டுகிறேன்

எங்கோ ஒரு மூலையில்
ஒன்றிரண்டு
விசித்திரங்கள் இருக்கக் கூடும்
அரிதாக
மிக மிக அரிதாக

நொந்த மனங்களே கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்

-எச். ஏ. அ ஸீஸ்

24. 07. 2015

No comments:

Post a Comment