Wednesday, July 29, 2015

மானுடத்துககு சலாம் சொன்ன மாமனிதன்

கலாம்
உன் பேச்சில் நாங்கள் லயிக்கலாம்
உன் கருத்தில் நாங்கள் திளைக்கலாம்
உன் நேர்மை உழைப்பை வியக்கலாம்
உன் சாதனை கண்டு வியர்க்கலாம்
உன் மனது போல எமக்கு எங்கே
வாய்க்கலாம்

மானுடத்துககு சலாம் சொன்ன
மாமனிதன் நீ கலாம்

இந்த மனிதர் வாழும் காலம் வரையும்
உனது புகழை யார் தான் மறைக்கலாம்
உனது பெயரை எவர் தான் மறக்கலாம்

நீ உயர்ந்த அரிய பண்புகள்
ஒன்று சேர்ந்த ஒரு குழாம்
மானுடத்துக்கு சலாம் சொன்ன
மாமனிதன் நீ கலாம்

மதம் கடந்து இனம் கடந்து
மொழி கடந்து நடை நடந்து
நீ பிறந்து வளர்ந்த வீட்டின் முன்னே
விரிந்து கிடந்த பெருங்கடலாய்
அதில் விளைந்து திரளும் பேரலையாய்

கனவாய் கனிவாய் கலாமே

-  எச்.ஏ. அஸீஸ்

28 யூலை 2015

அதாவுல்லாவிற்கு அக்கரையில் வாக்குப்பஞ்சம் - கல எறித்தாலும் பறவாயில்லை என்று குடிபெயர்கிறார் சாய்ந்தமருதை நோக்கி...

அம்பாறை மாவட்டத்தில் மயிலின் வருகையால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் வாக்கு வங்கியில் நாளுக்கு நாள் சரிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
அக்கரைப்பற்றுக்கு தேர்தல் காலங்களில் காலடியெடுத்து வைக்கக்கூட பயந்த கட்சிகளால் கூட நள்ளிவு வரை கூட்டங்கள்  நடத்தப்படுவதுடன் தேர்தல் நடவடிக்கை காரியாலங்களும் திறந்து வைக்கப்படுகின்றன.
இந்த தேர்தலில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் முஸ்லிம் மக்களாலும் தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதால் அக்கரைப்பற்று முதல் பொத்துவில் வரை மறுபுறம் மருமுனையில்  வரை அதாவுள்ளாவிற்கு பாரிய எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. இதற்கிடையில் சக வேட்பாளர்களை பொத்துவிலில் ஒருவரையும் இறக்காமத்தில் ஒருவரையும் அதாவுல்லா இறக்கியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் அதாவுல்லா பலவிதமான வியுகங்களை வகுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.
ஆனால் இம்முறை மச்சான் ஆப்பிழுத்த குரங்காக மாறி எதிரணியினரை தனது கூலியாட்களை வைத்து தாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் இதனால் தனக்கிருந்த சொற்ப வாக்குகளும் சிதறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
யாரோ ஒருவன் அதாவுல்லா மச்சானுக்கு காதில் போட்டுள்ளான் போலிருக்கு சாய்ந்தமருது தற்போது சற்று குளம்பிப் போயுள்ளது அற்கு சென்று ஏதாவது பொய் மூட்டையை கட்டவிழ்த்து விட்டால் சொச்சம் மிச்சம் இருக்கின்ற வாக்குகளையாவது சுருட்டிக் கொள்ளலாம்.என்று ,
அதற்காக மக்காள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை முடிந்த கையோடு சாய்ந்தமருது பரடைஸ் மணடபத்திற்கு சாய்ந்தமருது மக்களோட எதிர்கால தேர்தல் சம்பந்தமாக கொஞ்சம் கலந்துரையாட வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.
சாய்ந்தமருத மக்கள் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான் நான் எனது அரசியல் வரலாற்றில் ஒருநாளும் வாங்காத கல்லெறியும் கூட்டங்களுக்கு சென்றால் கூச்சலும் கூக்குரலும் வாங்காமல் வந்த சரித்திரமே இல்லை. ஆனா இப்ப நல்ல பிள்ளைகள் சாய்ந்தமருதில் இருக்கிறார்கள் தற்போது சக்கிராத்துகாலில் நான் இருக்கேண்டா மக்காள் நீங்களும் என்னை கைவிட்டால் பாராளுமன்ற வாசலைக்கூட இனி நான் பாக்க முடியாமல் போயிடும். தயவு செய்து இனிமேல் அக்கரைப்பத்துக்குள் மட்டும் நின்று சேவை செய்ய மாட்டேன் மூத்திரத்திற்குள் கரப்பு குத்த  மாட்டேன் நான் இப்ப திருந்திட்டேன். இப்ப நீங்க கல் எறிய நினைச்சா சின்ன கல்லா பாத்து எறிங்க. மாகாணசபை எலக்ஸன் முடிஞ்ச கையோட எறிஞ்ச கல் கொஞ்சம் பெரிசு.எனவே மக்காள் தயவு செஞ்சு அன்டைக்கு மறந்திடாம வாங்க மக்காள்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் கிராமங்கள் புறக்கணிப்பு - முன்னாள் அமைச்சர் தயாரெட்ண புலம்பல்

அக்கரைப்பற்றுக்கு அப்பால் தென்பகுதியிலுள்ள தமிழ்க்கிராமங்கள் பல்லாண்டுகாலமாக திட்டமிட்ட அபிவிருத்தியில்லாமல் சோபையிழந்து காணப்படுகின்றன. ஒரு விதத்தில் புறக்கணிப்பு பாரபட்சம் என்று கூட சொல்லலாம். இனி அது ஒருபோதும் இடம்பெறாது.
இவ்வாறு ஜ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்னா தெரிவித்தார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து இன்னமும் திருக்கோவில் வினாயகபுரப்பகுதியில் வாழும் தங்கவேலாயுதபுரம் கஞ்சிகுடியாறு கிராமங்களைச்சேர்ந்த தமிழ்மக்களை ஜ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்னா நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 ஜ.தே.க.திருக்கோவில் இணைப்பாளர் கே.நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவருடன் பி.தயாரத்னா எம்.பியின் செயலாளர் சுனில் இணைப்பாளர்களான வீ.கிருஸ்ணமூர்த்தி வி.ஜெயச்சந்திரன் ஏஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர்.
அங்கு தயாரத்னா மேலும் உரையாற்றுகையில்:
எனது நிதியில் முடிந்தளவு உதவியுள்ளேன். சுகாதார அமைச்சராகவிருந்தபோது திருக்கோவில் வைத்தியசாலைக்கு கட்டடம் வழங்கினேன். தங்கவேலாயுதபுரம் போன்ற மீன்குடியேற்ற கிராமங்களுக்கு மின்சாரவசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன். கரையோரப்பிரதேச தமிழ்மக்களுக்கு உரிய எம்.பி.இல்லாத காரணத்தினால் பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளேன்.
இம்முறை ஜ.தே.கட்சி ஆட்சியமைக்கப்போகிறது. ஆளும்கட்சியில் உங்களில் ஒருவர் எம்.பி.யாகினால் பெரும் வரப்பிரசாதமாகவிருக்கும். முதலில் உள்ளுராட்சிசபைத்தேர்தலுக்கு ஜ.தே.கட்சி சார்பில் முகம்கொடுங்கள். பிரதேச சிறுசிறு தேவைகளை பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
இலங்கை வரலாற்றில் மூவின மக்களும் ஏகோபித்தமுறையில் குறிப்பாக தமிழர் முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து சாதி இன மத பேதங்களுக்கு அப்பால் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு ஜனாதிபதி இன்றைய மைத்ரிபால சிறிசேன மட்டுமே.
நான் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஜ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ளேன். கடந்த 38வருடகாலமாக பாராளுமன்றத்தில் இருந்துவருகிறேன். இம்முறையும் வருவேன். அமைச்சராவேன்.அதற்கு உங்களது ஆதரவு கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை. என்றார்.
 
அவரது இணைப்புச்செயலாளர் வி.ஜெயச்சந்திரன் பேசுகையில்;
பிரதமரின் விருப்புக்கிணங்கவே அமைச்சர் தயாரத்னா மீண்டும் ஜ.தே.க.வில் இணைந்தார். வரலாற்றில் அம்பாறை தமிழர்களுக்கு குரல்கொடுத்துவருகின்ற ஒரேயொரு சிங்கள அரசியல்வாதி என்றால் அது தயாரத்னா ஒருவரே.
அவருக்கு பொய்பேசத் தெரியாது படிவம் நிரப்பி ஏமாற்றத்தெரியாது. வட்டமடு கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்திற்காக இன்றும் குரல்கொடுப்பவர் அவரே தவிர தமிழ் அரசியல்வாதிகளல்ல.எனவே உங்களது ஆதரவு தேவை. என்றார்.

அரசியல்விவகார இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி பேசுகையில்;:
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே யிருக்கிறார்கள்.அதற்கு தலைiயாய காரணம் எமது தமிழ் அரசியல்வாதிகளே. நான் பிழைப்புக்காக அரசியல் செய்பவனல்ல.சமுகத்திற்கு ஏதாவது செய்யலாமென்பதற்காகவே அரசியலை நேர்மையாக செய்கிறேன். இதுவரை நாம் தெரிவுசெய்த தமிழ்அரசியல்வாதிகள் எமது மாவட்டத்திற்கு என்னசெய்தார்கள் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.கேட்டால் நாம் எதிர்க்கட்சியிலிருக்கின்றோம். நாம் என்னசெய்வது? என்பார்கள்.
ஏன் நீங்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியிலிருக்கின்றீர்கள்.மக்கள் சொன்னார்களா? இல்லையே. நீங்கள் தொடர்ந்து பிழைப்பு நடாத்தவேண்டும்.அதுதான்.இதற்கு இன்னமும் ஏமாற தமிழ்மக்கள் தயாரில்லை என்ற செய்தியை இம்முறை நீங்கள் சொல்லவேண்டும்.அதுவே எமது கோரிக்கை. என்றார்.

ஜ.தே.க.முக்கியஸ்தர் ஆனந்தன் பேசுகையில்:
நான் நாவிதன்வெளி பிரதேசசபையில் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட்டு உப தவிசாளராக தெரிவானேன். ஆனால் அக்கட்சியின் இப்பிரதேச முகவர்கள் காட்டுகின்ற அட்டகாசம் அதிகம்.  எனது வேண்டுகோளின்பேரில்  அமைச்சர் தயாரத்னா ஒதுக்கிய 1கோடி ருபாவை அப்போதைய தவிசாளர் கலையரசன் தன்னிச்சையாக செலவழித்தார். அவர் செய்த திருவிளையாடல்கள் அதிகம். அவற்றைத் தட்டிக்கேட்டால் துரோகி என்பார்கள். அவரது ஊழல்களை  ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.
ஒரு தடவை அம்பாறை ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வட்டமடு காணிப்பிரச்சினை எடுக்கப்பட்டபோது பியசேன எம்.பி. மெதுவாக நழுவிவெளியேறினார். நீங்கள் தெரிவுசெய்த இரு மாகாணசபை உறுப்பினர்களும் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆக அமைச்சர் தயாரத்னா மட்டுமே குரல்கொடுத்தார்.
த.தே.கூட்டமைப்பினர் அரசியல் நடாத்துவதற்கு தமிழ்மக்கள் தொடர்ந்து பிரச்சினையிலே இருக்கவேண்டும்.அதுதான் அவர்களது தேவை.இல்லாவிடில் 100நாள் வேலைத்திட்டத்திற்குள் தமிழ்க்கைதிகளை விடுவித்திருக்க முடியாதா? செ;சயமாட்டார்கள்.அவர்கள் வெளியேவந்தால் இவர்களுக்கு அரசியல்செய்யமுடியாது.எனவே இன்னமும் ஏமாறாது தயாரத்னாவிற்கு வாக்களியுங்கள் என்றார்.
மக்கள் தமது தேவைகளை பிரச்சினைகளையும் முன்வைத்துப் பேசினர்.

பெண்ணே என்னைப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை!

பெண்ணே
என்னைப்
பிடிக்கா
விட்டாலும்
பரவாயில்லை!
கடைசியாய்
ஒரு முறை
எனைப்பார்த்து சிரியேன்!
ஏன் என்றால்
உன் சிரிப்பில்
கொட்டும்
சில்லரை எடுத்துப்
                                                      பல்லறை
                                                      கொண்ட பங்களா கட்ட
                                                      போவதில்லை!
                                                      அந்த சில்லரையில்
                                                      ஒரு கல்லறை
                                                      கட்டி சிங்களாவே
                                                      வாழ்ந்து விட்டு போகிறேன்!
                                                     அதற்காக
                                                     ஒரு முறை
                                                     சிரியேன்!

இந்த ஜென்மம் முழுவதும்உன் அன்பிற்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும்....

இந்த ஜென்மம் முழுவதும்உன் அன்பிற்கு மட்டும் அடிமையாக இருக்க வேண்டும்........

அமைச்சர் றிஸாத் பதியுதீனுக்கு எந்த அமைச்சைக் கொடுத்தாலும் அதனை திறம்படச் செயற்படுத்துவார் - ஜனாதிபதி மைத்திரி

1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார்.
கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது, அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த அமைச்சை கொடுத்தாலும் அதனை திறம்பட செய்யக் கூடியவர்.அரசாங்த்தின் திட்டங்களை உரிய முறையில் முன்னெடுக்குமத் ஒரு சிற்நத அமைச்சர் என்பதை இங்கு நான் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
நான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 6 மாதங்கள் தான் ஆகின்றது.இந்த 6 மாதங்களுக்குள் பாரிய மாற்றங்களை செய்துள்ளேன்.குறிப்பாக வடக்கிலும்,கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
அது மட்டுமல்லாமல் வடக்கில் உள்ள மக்கள் எனக்கு அளித்த வாக்கின் காரணமாக அவர்கள் எனது உள்ளத்தின் ஒரு பகுதியில் அவர்களை வைத்துள்ளேன்.என்றும் அவர்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன்.என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இன்று யாழ்பாணத்துக்கும்,கிளிநொச்சிககும் நான் விஜயம் செய்துள்ளேன்.எல்லா பகுதிகளிலம் பல பிரச்சினைகள் இருக்கின்றது.குறிப்பாக மக்களின் வாழ்வாதார,கல்வி,சுகாதாரம்,விவசாயம் பிரச்சினைகள் பற்றி பேசுகின்றனர்.அது போல் குடிநீர் பிரச்சினைகள் இருக்கின்றது.
நீங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் சிறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும்.இதனை பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்படுத்தப்படுகின்ற புதயி அரசாங்கத்தின் ஊடாக சிறந்த விவசாய செயற்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரைிமையளித்து செயங்பட ஆலோசனை வழங்கவுள்ளேன்.அதிகமாக நாங்கள் பயன்படுத்தும் பருப்பு கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது என்றும் கூறினார்

அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் எதிரணியினரை தாக்கும் படலம் ஆரம்பம்அக்கரைப்பற்று 6 ஆம் குறிச்சியைச்சேர்ந்த சலீம் என்பவர் அக்கரைப்பற்று அரசியடியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை  தேசிய காங்கிரஸ் அதாவுல்லாஹ் அணியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு அக்கரைப்பற்று தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இதனை அடுத்து கபே அமைப்புக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கபே அமைப்பின் கண்காணிப்பாளர் அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு சென்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இன்றுமாலை கபே அமைப்பின் ஊடக அறிக்கையில் உட்படுத்தப்படவுள்ள இச்சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றுக் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: சென்ற தேர்தல்களைப்போல் அல்லாது இம்முறை தேர்தல் சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி மொழிவழங்க்கப்பட்டுள்ள்து. எனவே தேர்தல் வன்முறைகளை உரிய இடத்துக்கு உடனுக்குடன் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Tuesday, July 28, 2015

டொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இரத்து

டொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின் ஶ்ரீலங்கா   சுதந்திரக் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, குறித்த நபர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளமையை அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் அட்டாளைச்சேனையில் வுீசப்பட்ட கல வீச்சை அடுத்து அமைச்சர் றிஸாத்தின் வாக்கு பலம் அதிகரித்துள்ளது

அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் முகாவின் ஹக்கீம் தரப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் முகா பாரிய வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் மக்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர்.
அ.இ.ம.காவின் அம்பாறை வருகை முகாவுக்கு பாரிய சவாலையும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவும் சவாலும் ரிசாத் பதியுதீனின் கடந்த சனி ஞாயிறு தினங்களில் அம்பாறைக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் மூலம் மேலும் வலுவிழந்துள்ளது.
இதன் உச்சக்கட்ட வெளிப்பாடே ரிசாத் மீதான கல்லெறித் தாக்குதலாகும்.
அட்டாளைச் சேனையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பிரதேச மக்களையும் குறிப்பாக உலமாக்கள் புத்தி ஜீவிகளையும் மிகவும் வேதனையடையச் செய்துள்ளது.
அட்டாளைச் சேனை பிரதேசத்தை ஏனைய முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய பிரதேசங்கள் மத்தியிலும் கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஹக்கீம் தரப்பு குழுவால் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் தொணியில் தமது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அட்டாளைச் சேனை மக்கள் தேசியப்பட்டியல் ஒன்றினூடாக தமது பகுதிக்கு எம்பிப் பதவி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஹக்கீமுக்கு கொடுக்கும் அழுத்தம் ஹக்கீமை மிகவும் அவமானச்சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.
இந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் வகையில் தான் - அட்டாளைச்சேனை என்னும் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதனை காரணமாக முன்வைத்து தேசியப்பட்டியல் வழங்காமல் மறுதலிப்பதே ரிசாத் மீதான இத்தாக்குதலில் ஹக்கீம் தரப்பு ஈடுபட்டமைக்கான பின்னணி என்று அட்டாளைச் சேனை முகா பிரமுகர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
நாடு பூராகவும் முகா இரண்டே ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் என புலனாய்வுத் தகவல்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஹக்கீமின் நெருங்கிய சகாவான சட்டத்தரணி சல்மான் தொலைபேசியூடாக கருத்து வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் ஐதேக ஒரே ஒரு தேசியப்பட்டியலை மாத்திரமே இதன் மூலம் வழங்க சாத்தியமுள்ளது.
இவ்வாறான நிலையில் தோல்வியுறும் தனது எம்பி மார்களுக்கு வழங்காமல் புதிதாக ஒரு அட்டாளைச்சேனை நபருக்கு ஹக்கீம் வழங்குவாரா என்ற நியாயமான கேள்வி இன்று அட்டாளைச் சேனை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நேற்றிரவு(27) அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் ' அட்டாளைச் சேனைக்கு தேசியப்பட்டியல்' என்ற அப்பிரதேச மக்களின் கூக்குரலுக்கு ஹக்கீம் நழுவல் போக்கான பதிலை கூறியதன் மூலம் ஊர்ஜிமாகின்றது.
ரிசாத் மீதான கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வேதனையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ள செய்தி முகா தலைமைக்கும் முகா வேட்பாளர்களுக்கும் பாரிய சரிவை தோற்றுவித்துள்ளது.
இதனை உணர்ந்து கொண்டுள்ள இத் தரப்பினர் ரிசாத் மீது முகா போராளிகள் கல்லெறித் தாக்குதல் நடத்தவில்லை என நேற்று அட்டாளைச் சேனை கூட்டத்தில் பகிரங்கமாக மறுதலித்து அட்டாளைச் சேனை உட்பட ஏனைய முஸ்லிம் மக்களினதும் நல்லபிமானத்தை பெற்றுக் கொள்ள நாடகம் ஒன்றை அரங்கேற்றி தோல்வியுற்றனர்.
ரிசாத் பதியுதீன் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை கூட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமலேயே ரிசாத் மீது குறித்த கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அட்டாளைச் சேனையை சேர்ந்த முகா வின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் நேற்று நள்ளிரவை தாண்டி அமைச்சர் ரிசாதை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கவலையை வெளிப்படுத்தி மன்னிப்பையும் கோரியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வேட்பாளரை வழிமறித்தி அச்சுறித்திய நபருக்கு 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் - அக்கரைப்பற்றில் சம்பவம்

அக்­க­ரைப்­பற்று பிர­தான வீதியில் அண்மையில்  வாக­னத்தில் சென்று கொண்­டி­ருந்த வேட்­பாளர் ஒரு­வரை வழி­ம­றித்து அச்­சு­றுத்­திய நப­ரொ­ரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்­தனர்.
கைது செய்த சந்­தேக நபரை கடந்த  திங்­கட்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்­னி­லையில் ஆஜர் படுத்­திய போது நீதி­பதி எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;
எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் திகாமடுல்ல மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிடும் யூ.கே.ஆதம் லெவ்வை என்­பவர் தனது சொகுசு வாக­னத்தில் அக்­க­ரைப்­பற்று பிர­தான வீதி­யூடாக அட்­டாளைச் சேனை நோக்கி சென்று கொண்­டி­ருக்கும் போது பின்னால் மோட்டார் சைக்­கிளில் சென்ற நபர் ஒருவர் வாக­னத்­துக்கு முன்னால் சென்று வாக­னத்தை வழி மறித்து வேட்­பா­ளரை தகாத வார்த்­தை­களால் ஏசி அச்­சு­றுத்­தி­ய­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸில் முறைப்­பாடு செய்­த­துடன் வேட்­பாளர் தனது வாக­னத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கம­ராவில் அச்­சம்பவம் பதிவு செய்­யப்­பட்­ட­தையும் காண்­பித்­துள்ளார்.
இதனையடுத்து்பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்

அட்டாளைச்சேனை மக்களின் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு - தலைவர் அறிவிப்பார் என்று காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

யானை சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேற்பாளர்களை ஆதரித்து பிரச்சார கூட்டம் நேற்று அட்டாளைச்சேனை மன்னில் நடைபெற்றது 
தேசியப்பட்டியல் என்ற உறுப்பினர் பிரச்சினைக்கு ஒரு முடிவு தலைவர் கூறுவார் என்று பல பேச்சாளர்கள் கூறினார்கள் ஆனால் இறுதியில் மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றமான பதிலாக இருந்தது 
தலைவர் பேச ஆரம்பித்ததும் அவரது வழமையான பானியில் மக்களின் சிந்தனையை வேறு திசைக்கு மாற்ற குட்டி கதைகள் பகடி வார்த்தைகள் பேசி இறுதியில் அம்பாறை மாவட்டத்தில் தேசியப்பட்டியல் கிடைத்தால் அது அட்டாளைச்சேனைக்கு தான் வழங்கப்படும் என்று உறுதியற்ற பசப்பு வார்த்தை சொன்னதும் அவரது அடிவருடிகளின் கை தட்டலுடன் கூட்டம் முடிந்தது தலைவர் நீன்ட நேரம் பேசுவார் பல கேழ்விகள் கேக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்த போராளிகளின் நிலையை உனர்ந்து கொண்ட ஹக்கீம் மிகவும் தந்திரமான முறையில் 10 நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொண்டார் 
முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனம் எடுத்தால் மட்டுமே அம்பாறை மாவட்ட தேசியப்பட்டியலுக்கு உரிமை கூற முடியும் அது சாத்தியப்படாத விடயம் அப்படி கிடைத்தாலும் நிச்சயிக்கபட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் கட்சியின் செயலாளர் ஹசன் அலிக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இரு தேசியபட்டியலையு அம்பாறைக்கு கொடுக்க மற்ற மாவட்ட மக்கள் அனுமதிப்பாகளா என்பதை சிந்திக்க வேண்டும் 
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அல்லது தேசியப்பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே தேசியப்பட்டியல் MP ஆக முடியும் வேறு தேசியப்பட்டியல் MP ஒருவர் இராஜினாமா செய்த பின் கட்சி விரும்பியவரை அதே பதவிக்கு நியமிக்க முடியாது தேர்தல் ஆனையாளரின் உத்தரவு என்று ACMC யின் செயலாளர் ஹமீட் விரிவாக அட்டாளைச்சேனை கூட்டத்தில் சொன்னார் .ஓரு கட்சியின் செயலாளர் இப்படி கூறியது பொய் என நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளையான் போல் முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் செய்யும் காட்டி கொடுத்து கூட்டி கொடுப்பவர்கள் சொல்கின்றனர் இவர்கள் மக்களின் கன்னில் மண்னை தூவ முயற்சி செய்கின்றனர் அது வெற்றி அளிக்குமா?
ஏன் இந்த சட்டத்தின் விளக்கத்தை சட்ட முதுமாமனி ஹக்கீம் மேடையில் வைத்து மக்களுக்கு விரிவாக சொல்லி மக்களின் சந்தேகத்தை போக்கி இருக்கலாம் தானே அதுவும் இல்லை அதனால் ஹமீட சொன்னது உன்மை என புரிகின்றது 
எனவே அட்டாளைச்சேனை மக்கள் மீன்டும் ஒரு முறை ஏமாற்றம் அடைய போகிறார்கள் என்பது கன் முன் தெரிகிறது அதனால் மண் குதிரையின் மேல் மீண்டும் பயனம் செய்வதை விட்டு விட்டு அட்டாளைச்சேனை மக்களின் நீன்ட நாள் இலட்சியத்தை அடைய அரசியலில் வேறு பாதையால் செல்வதால் மட்டுமே முடியும் வேறு இந்த ஹக்கீம் தலைமை தாங்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் என்றுமே முடியாது என்பதை மறவாதீர்கள்

முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்செயலாக வெற்றிபெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது .அவருக்கு சட்டப்பிரச்சினை இருக்கின்றது. றவுப் ஹக்கீம்

முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்செயலாக வெற்றிபெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது .அவருக்கு சட்டப்பிரச்சினை இருக்கின்றது. இது விடயமாக நான் சட்ட ஆலோசகர்களுடனும் சிரேஸ்ட சட்டத்தரணிகளுடனும் கலந்துரையாடியுள்ளேன்.
இவ்வாறு சம்மாந்துறை விழினையடியில் கடந்த திங்கட் கிழமை ( 27 ) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை மண் நீண்டகாலமாக இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவததை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அம்பாறை மாவட்டத்தில் யானை சின்னத்தில் களம் இறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூரால் மட்டுமே ஏற்படுத்த முடியும். மன்சூரில் பல பிழைகள் இருக்கலாம். அவரோடு பல முரண்பாடுகள் இருக்கலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிழை செய்யக்கூடியவன். அவ்வாறு கோபதாபங்களுக்காக எதிராக வாக்களிப்பதனால் நாம் மீண்டும் வரலாற்று துரோகமொன்றை இந்த மண்ணுக்கு செய்யப்போகின்றோம் என்பதனை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
இம்முறை தேர்தலில் என்னை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுமாறு பலர் ஆலோசனை வழங்கினார்கள். அவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எந்த சவாலும் இல்லை. கட்சியால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களே போதும். அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான வியுகங்களை நான் ஏற்கனவே வகுத்து விட்டேன்.
ஒருமுறை நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. கண்டி மாவட்டத்தில் கட்சிப் போராளிகள் 10 பேரை பலிகொடுத்த அந்த வேளையிலும் கூட அப்போது அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டிப்போட்டுவிட்டு மரச்சின்னத்தில் போட்டியிட்டு மூன்று பிரதிநிதித்துவத்தை பெற்றோம் ஆனால் பின்னர் அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து விட்டனர். கட்சியோடும் வேட்பாளர் மன்சூரோடும் முரண்பட்டிருந்த கட்சியை விட்டு போன , விலகி போகவிருந்த கட்சியின் முக்கிய போராளிகளுடன் கதைத்து அவர்களை ஒரு சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். நான் திட்டவட்டமாக சொல்கின்றேன் இனிமேல் கட்சியின் போராளிகள் எவரும் மாற்றுக் கட்சிக்காரர்களிடம் போகமாட்டார்கள் என்று.
இப்போது நாங்கள் ஆட்சியில் இருக்கின்றோம். எதிர்காலத்தில் பலமான  ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம். அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிகளாக மாறும் வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்திலே முகம் மோசமாக இருக்கின்றது என்பதற்காக மூக்கை அறுத்துக் கொள்ளாதீர்கள்..
தலைவர் அஸ்றபின் மறைக்கு பின்னர் மர்ஹும் அன்வர் இஸ்மாயிலைத் தவிர எவரும் முஸ்லிம் காங்கரஸ் கட்சியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. அந்த வரலாற்றுத் தவறை மீண்டும் இச் சம்மாந்துறை மண் செய்யக்கூடாது. கடந்த எட்டு வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவததை இழந்து நிற்கின்ற சம்மாந்துறைக்கு கிடைத்திருக்கின்ற இந்த பெரும் சந்தர்ப்பததை பிரிந்து நின்று இல்லாமல் செய்து விடாதீர்கள்.
இப்போது  அமைச்சர் றிஸாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் போட்டியிடுவது அவர்கள் பிரதிநிதித்துவததை பெறுவதற்காக அல்ல இம்மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதனை தடுப்பதற்கும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்காகவுமே. இந்த காரியத்திற்கு இம்மாவட்ட முஸ்லீம்கள் துணை போகக்கூடாது.
சம்மாந்துறைக்கு கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில் பல இழுபறிகள் ஆரம்பத்தில் ஏற்பட்டது. மஸுறா சபையுடன் கலந்துரையாடிய பின்னர் மன்சூரை வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதும் அவரின் பதவி மற்றும் சகல பொறுப்புகளிலுமிருந்து விலகிக் கொள்ளுமாறு ராஜினமாக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளேன். இந்தப் பந்தயத்தில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் கட்சித் தலைமையின் வேண்டுகோளின் பேரிலேயே இதனைச் செய்துள்ளார்.
இப்போது அம்பாறை மாவட்டத்திலே ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினது வாக்குப் பலத்தோடு அறுதிப்பெரும்பான்மை வாக்குளால் வெற்றிபெற்று நான்கு ஆவனங்களைப் பெறப்போகின்றது. அதில் எமது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மூவர் வெற்றி பெறுவார்கள்.அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி எனும் பஸ் வண்டி ஓடுமேயானால் அதன் சாரதியாகவும் நடத்துனராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பானரே இருப்பார் என்பதை தெட்டதெளிவாக கூறிக் கொள்கின்றேன்.
என்று குறிப்பி்டடார்.

"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவியல் துறையில் வழிகாட்டிய ஒரு மாமேதையே விஞ்ஞானி அப்துல் கலாம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

உலகம் போற்றும் பேரறிஞராகத் திகழ்ந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் பேரிழப்பாகும்.என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவியல் துறையில் வழிகாட்டிய ஒரு மாமேதையே விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களாவர்.

இந்தியாவை வல்லரசு நாடுகள் பட்டியலில் இணைப்பதைக் கனவாகக் கொண்டிருந்த அவர் அதற்காக தனது அறிவியல் ஆராய்ச்சித் துறையை நாட்டுப்பற்று சிந்தனையுடன் மிகப்பெரும் தியாகத்துடன் பயபடுத்தி வந்துள்ளார்.

இந்­திய ஏவு­க­ணையின் தந்­தை­யா­கவும் சர்வதேசத்தின் முன்னணி விஞ்­ஞா­னி­யா­கவும் திகழ்ந்த அவர் தனது அறிவு, ஆற்றல்களை நாட்டின் உயர்ச்சிக்காகவும் உலக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது நாட்டில் பிறந்து முழு உலகுக்கும் அறிவொளி பரப்பிய இத்தகைய ஓர் உயர்ந்த பிரஜையை முஸ்லிம் என்ற வரையறைக்குள் மட்டுப்படுத்தாமல் தமது நாட்டு சொத்து, அறிவியல் மேதை என்று கருதி இந்தியா தனது குடியரசுத் தலைவராக நியமித்து அழகு பார்த்ததுடன் அரசியல் ரீதியான பங்களிப்பையும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டது.

இவ்வாறு உலகில் போற்றத்தகு உத்தம மனிதராகத் திகழ்ந்த டாக்டர் அப்துல் அவர்களின் வெற்றிடம் எத்தனை சகாப்தங்கள் சென்றாலும் நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதை நினைக்கின்றபோது மனம் நெகிழ்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பாசறைஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையொன்று இன்று சாய்ந்தமருது லீ மெரிடியன் ஹோட்டலில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்ப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது கொம்டெக் கல்வி நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் றிஸ்தி சரிப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான .எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியின் முக்கியத்துவம் பயிற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
முஸ்லீம்களும் இன ஒருமைப்பாடும் எனும் தலைப்பில் இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சிப் பாசறையில் தகவல் திரட்டுதல் , பொதுமக்கள் அபிப்பிராயம் அறிதல் , கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளுதல் , நடைபெற்ற அநியாயங்களைப்பற்றி பரிசீலிப்பது , இன ஒற்றுமைக்கு முஸ்லீம்களின் பங்களிப்பை கண்டறிதல் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன்சிறந்த தலைமைத்துவம் எனும் தலைப்பில் குழுநிலை கலந்துரையாடலும் , இன்றைய இளைஞர்களும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தலைமைத்துவ பண்புகளும் , இளைஞர்களும் அவர்கள் எதிர்நோக்கும் சமகால சவால்களும் எனும் தலைப்பில் பிரபல்யம் பெற்ற விரிவுரையாளர்களினால் விரிவுரைகளும் நிகழ்த்தப்பட்டன