Tuesday, May 26, 2015

சாய்ந்தமருது கரைவாகு விளையாட்டு மைதானம் சர்வதேச அந்தஸத்தைப் பெறும் - எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.( நமது நிருபர்)
சாய்ந்தமருது பிரதேசம் சுனாமி அனர்த்தத்தினால்  இழந்து தவித்த விளையாட்டு மைதானம் ஒரு தசாப்தத்தின் பின்னர் இப்பிரதேச இளைஞர்கள் விளையாடக்கூடிய மைதானமாக உருமாறியிருப்பது கண்டு பெரு மகிழ்சியடைகின்றேன்.
எதிர்காலத்தில் இதனை சர்வதேச தரத்திலான மைதானமாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றேன். . இவ்வாறு கடந்த சனிக்கிழமை ( 23 )  சாய்ந்தமருது பிரதேசத்தில் கரைவாகு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 ஒரு நாட்டின் முதுகெலும்பென்பது இளைஞர்களும் மாணவர்களுமென்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும் .. அந்த வகையில் இந்த மண்ணில் இருக்கின்ற இளைஞர்கள் ஒரு தசாப்தகாலமாக எதிர்நோக்கியருந்த பாரிய பிரச்சனை அவர்கள் தங்கள் பொழுதை சிறந்த வகையில் கழிப்பதற்கான ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதனை நான் அறியாமல் இல்லை. கடந்த 11 வருடங்களுக்கு முன்பு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது சாய்ந்தமருது பிரதேசம் மிகப்பெரிய அழிவை சந்தித்திருந்த போது இதே இளைஞர்கள் தான் தியாக மனப்பாங்கோடு முன்வந்து தங்களுக்கென்று பிரதான வீதிக்கு அண்மையிலிருந்த தாமரை விளையாட்டு மைதானத்தை சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அமைப்பதற்கும் , மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தையும் அமைப்பதற்கும் ஆலொசனையும் ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்கள். இந்த தியாக மனப்பாங்கோடு செயற்பட்ட இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லாத குறையினை நிவர்த்தி செய்வதென்பது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இருந்தும் இம்மைதான பிரச்சினையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் சாய்ந்தமருதிற்கு நியமிக்கப்பட் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரைவாகு வட்டையில் காணிகள் வழங்கும் போது ஏற்கனவே இழந்த விளையாட்டு மைதானத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு மைதானத்தை சாய்ந்தமருதில் அமைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதற்காக 10 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியிருந்தார். இருந்தும் கரைவாகு வட்டை மிகவும் தாழ்ந்த பிரதேசம் என்ற அடிப்படையில் இதனை மண்ணிட்டு நிரப்பி புரணமான மைதானமாக அமைக்கும் முயற்சியில் கைவைப்பததென்பது  அரசியல் தலைமைகள் என்ற ரீதியில் மிகவும் பீதியாகவும் பயமாகவும் இருந்தது.
நான் அந்த காலகட்டத்தில் கல்முனை மாநகர மேயராக இருந்த போது சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் நானும் சேர்ந்து இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் சிந்தித்த போதும் அதற்கு மேலாக கல்முனை மாநகர எல்லைக்குள் சேரும் குப்பைகளைப் போட்டு அதற்கு மேலால் மண்ணிட்டு நிரப்பலாமா என்று முயற்சித்த போதிலும் இத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. இருந்தும் கடந்த வருடம் இந்த மைதானத்தை புர்த்தி செய்து இப்பிரதேச இளைஞர்களின் நீண்ட நாள் தேவையான விளையாட்டு மைதானத்தை எப்படியாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கும்  எனக்கும் மற்றும் இப்பிரதேச இளைஞர்களுக்கும் தோன்றியது. அந்த அடிப்படையில் கடந்த வருடங்களில்  இந்த சவாலை முறியடிப்பதற்காக பல அரசியல் வாதிகளும் நானும் பல இலட்சம் ருபாய்களை இந்த மைதானத்தை மண்ணிட்டு நிரப்புவதற்காக நிதியினை ஒதுக்கியருந்த போதிலும் மைதானமொன்று உருவாவதற்குரயி எந்தவொரு அறிகுறியும் அதில் தென்படவில்லை அதடதோடு அந்த முயற்சி வெற்றியளிக்கவுமில்லை. அதன் பிறகு இப்பிரச்சினையிலுள்ள சிக்கல்களை ஆராயும் வகையில் பிரதேச செயலாளருடன் கலந்தாலோசித்து இந்த மைதானத்திற்கு ஒதுக்கப்படு்ம நிதியினை வெறுமனே கொந்தராத்துக் காரா்களுக்கு வழங்காமல் இப்பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் ஒன்றுக்கு வழங்குதால் இதில் புரணமான ஒரு வெற்றியினை பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவ்வாறான முடிவின் மூலம் இந்நிதி வழங்கப்பட்டு இயற்கையான காற்றோட்டத்துடன் கூடிய அழகான பசுமையான ரம்மியமான ஒரு சூழலில் இன்று புரணத்துவம் பெற்ற ஒரு மைதானமான உருமாறியிருப்பது கண்டு பெரு மகிழ்சியடைவதோடு பிரதேச செயலாளருக்கும் விளையாட்டு சம்மேளனத்திற்கும் இப்பிரதேச இளைஞர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயத்தில் பல சட்டச் சிக்கல்கள் இருந்த போதிலும் பிரதேச செயலாளரும் நானும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையைப் பெற்று இந்நிதியினை சிரமதான அடிப்படையில் விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்குரிய அனுமதியைப் பெற்றோம். அந்த அடிப்படையில் இம்மைதானத்திற்குரிய நிதி விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கிடைத்திருந்தது. ஒதுக்கப்பட்ட முழு நிதியும் எந்தவித வீண் விரயமும் இல்லாமல் எந்தவித இலாப நோக்கமும் இல்லாமல் சிரமதான அடிப்படையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பலருடைய மேற்பார்வையில் இரவு பகலாக உழைத்ததன் காரணமாக பல கோடி ரூபாய்கள் செலவழித்து வருடக்கணக்கில் செய்ய வேண்டிய மைதானத்தை மிகக்குறுகிய காலத்தில் ஒதுக்கப்பட் நிதிக்குள் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்போது நிரப்பப்பட்டிருப்பது 4 ஏக்கர்கள் தான் ஆனால் இம்மைதானத்தை மேலும் மண்ணிட்டு நிரப்பி விரிவாக்கி சகல வசதிகளையும் கொண்ட உள்ளக மற்றும் வெளியக விளையாட்டுத் தொகுதி , நீச்சல் தடாகம் , பார்வையாளர் அரங்கு என்பவற்றை அமைத்து அம்பாறை மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச தரத்திலான மைதானமாக சாய்ந்தமருது கரைவாகு விளையாட்டு மைதானத்தை மாற்றுவற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். இந்த வருடம் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதால் இம்மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியினைப் பெறுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால் அவரது அமைச்சு மூலமாகவும் பெருமளவு நிதியினை பெற்று எதிர்காலத்தில் சாய்ந்தமருதில் புரணத்துவம் பெற்ற ஒரு மைதானம் அமையும் என்பதில் எனக்கு புரண நம்பிக்கையுள்ளது.

No comments:

Post a Comment