வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைகாசிச்சடங்கு கடந்த திங்கள் மாலை கடல்தீர்த்தம் கொணர்ந்து திருக்கல்யாணக்கால் முறித்து நடுவதுடன் ஆரம்பமாகியது. ஆலயத்திலிருந்து கப்புகனார் சகிதம் கடலுக்குச்சென்று அங்கு கடற்கரையில் விசேடபூஜை செய்து கடல்தீர்த்தம் கொணரப்பட்டு நடைபாவாடை மீது வலம்வந்து திருக்கல்யாணக்கால் முறித்து ஆலயத்திற்குக் கொண்டுசென்று பின்னர் கல்யாணக்கால் நடப்பட்டு விஷேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
Tuesday, May 26, 2015
கல்முனை ஸாஹிராக்கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது 60வது வயதில் ஓய்வு பெற்றார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 4 தசாப்தங்களாக ஆசிரியராக ,
பகுதித்தலைவராக , உதவி அதிபராக , பிரதி அதிபராக , அதிபராக கடமையாற்றிய
கணிதபாட சிரேஸ்ட ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது 60வது
அகவையில்
ஓய்வுபெற்றார்.
1975 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கணிதபாட ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் கணித பாடத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் , அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பொறியியல் , மருத்துவம் , கணக்கியல் ,கலை , சட்டம் , அரச சேவையில் உயர் பதவி , பல கல்விமான்கள் என உருவாவதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்தவர்.
பாடசாலையில் தான் அதிபர் பதவியியனை வகித்த போதிலும் இறுதிவரை மாணவர்களுக்கு கணித பாடத்தினை கற்பித்த பெருமை இவரைச்சாரும். இவரால் கற்று உயர்ந்தவர்கள் பலர். வறிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீண்டும் இவர் சாய்ந்தமருதில் பிறந்து நிந்தவுரில் திருமணம் முடித்துள்ளார்.
சாய்ந்தமருதில் கற்ற , நல்ல அபிமானம் பெற்ற , ஒழுக்கமுள்ள , பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் ஏனைய ஆசான்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
தனது முதல் நியமனத்தை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பெற்றுக் கொண்ட இவர் பின்னர் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியிலும் கற்பித்துள்ளார்.
வயதால் ஓய்வு பெற்றாலும் உடல் தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் ஆலோசனைகளும் வழிகாட்டலும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பிரயோசணம் உள்ளதாக அமையும்.
ஹம்ஸா சேரின் நீடித்த வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக

கல்முனை ஸாகிராக்கல்லூரி அணி சிங்கர் ஸ்ரீலங்கா கிண்ணத்திற்காக நாளை பண்டாரவளையில் புனித தோமஸ் கல்லூரியுடன் சமரில்
( நமது நிருபர்)
கல்முனை ஸாஹிரா சிங்கர் ஸ்ரீலங்கா இலங்கை பாடசாலைகள் கிறிக்கட்
சம்மேளனம் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அநுசரணையில் ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை
பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி
நானை( 27 ) பண்டாரவளையில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.
தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் நடத்தாப்படும் மேற்படி சுற்றுப்
போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன்
மூலம் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அகில இலங்கை சிங்கர் ஸ்ரீ லங்கா பாடசாலைகள் சம்பியன்களாக
தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருடத்திற்கான போட்டி நாளை ( 27 ) பண்டாரவளை
புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கும் பண்டாரவளை புனித
தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கையிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகள் கலந்து
கொள்ளவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும்
ஒரே பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , கொழும்பு
றோயல் கல்லூரி அக்குரண அல் அஸ்ஹர் கல்லூரி , ,பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி , புனித
அலோசியஸ் கல்லூரி , பலாங்கொட ஆனந்த மைத்திரிய மகா வித்தியாலயம் , கல்கிசை புனித தோமஸ்
கல்லூரி , பாதுக்க ஸ்ரீ பியரெட்ன மகா வித்தியாலயம் , கொட்டாவ ஆனந்த மகா வித்தியாலயம்
, கொழும்பு நாலந்த கல்லூரி , கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி , கொழும்பு வெலுவான கல்லூரி
, கொழும்பு இந்துக் கல்லூரி , றாகம் பஸீலிகா கல்லூரி , மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ்
கல்லூரி , கொழும்பு தேஸ்டன் கல்லூரி , ஹுங்கம விஜயபா கல்லூரி , மத்துகம் சீ.டபிள்யு
.டபிள்யு.கன்னங்கரா வித்தியாலயம் , வாதுவ மத்திய கல்லூரி , ஹொரண தக்ஸிலா கல்லூரி ,
கரண்தெனிய மத்திய கல்லூரி , யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி , யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணக்கல்லூரி , கோட்டே புனித தோமஸ் கல்லூரி , தெஹிவல எஸ்.ரீ.எஸ்.கல்லூரி
, மொரட்டுவ புனித செபஸ்தியன் , ஹேனாகம வித்தியாலயம்
, கட்டுனேரிய புனித செபஸ்தியான் , குருநாகலை மலியதேவ கல்லூரி , நீர்கொழும்பு ஹரிஸ்சந்திரா
கல்லூரி , வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி , ஆகிய இலங்கையின் முன்னணி பாடசாலைகள் கலந்து
கொள்ளவுள்ளன.
கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணி வீரர்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளர்
ஆசிரியர் அலியார் ஏ பைஸருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , விளையாட்டு
அபிவிருத்திக்குழு , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழைய மாணவர் சங்கம் என்பன நடைபெறவிருக்கும்
போட்டியில் கடந்த வருடம் போல் வெற்றி பெற்று அகில இலங்கை சம்பியன்களாக வெற்றிபெற்று
எமது மண்ணிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையைத் தேடித்தர வேண்டும் என வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)