Friday, October 9, 2015

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா



சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆங்கில ஆசிரியர்  .எச்.அல் - ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது
கல்லூரி அதிபர் எம்..அஸ்வர் பிரதம அதிதியாகவும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சிரேஸ்ட ஆசிரியரும்  சாய்ந்தமருது  கோட்ட சுற்றாடல் ஆணையானருமான எம்..எம்.அஸ்ஹர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்ற வினோத விளையாட்டு நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு கல்வியுட்டிய ஆசிரியர்கள் மாணவர்களால் பரிசி வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.









Tuesday, September 29, 2015

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை வலயத்தில் 3 அதிபர்கள் மற்றும் 9 ஆசிரியர்களுக்கு பிரதீபா பிரபா விருது



கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் .
கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் ,  பாண்டிருப்பு   வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் ,  மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் .எல்.எம்.ஏ.நழீர்  ஆகியோரே  தெரிவு  செய்யப் பட்ட  அதிபர்களாவர் .
இவர்களுக்கான  விருது  வழங்கும்  வைபவம்  சர்வதேச  ஆசிரியர்   தினமான ஒக்டோபர்  06 கொழும்பு பண்டார நாயக்க   சர்வதேச ஞாபகார்த்த  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் வழங்கப் படவுள்ளது .
இவ்வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர்  கௌரவ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .

Wednesday, September 16, 2015

கல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
கல்முனைத் தொகுதிக்கான பிரதான நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றபோது கல்லூரியின் பழைய மாணவரும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தினார்.
மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில்  இடம்பெற்ற  ” தலைவர் தின நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் கலந்து கொண்டு .மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினையும் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியை ஜனாபா எஸ்.ஜே.எம்.தௌபீக் நன்றியுரையினையும்  நிகழ்த்தினார்கள்.
நிகழ்வின் இறுதியில் அன்னாருக்காக விசேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றன.












Tuesday, September 8, 2015

கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 வருட புர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவனம் கிறிக்கட் சீருடை அன்பளிப்பு

கிழக்கு மாகாணத்தில் புகழ் புத்த ஆடை நிறுவனமான சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடினபந்து கிறிக்கட் சீருடைகளை அன்பளிப்பு செய்திருந்தது.
கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் அணித்தலைவர் ஏ.பி.எம்.பைஸல் தலைமையில் நடைபெற்ற சீருடை அறிமுக நிகழ்வில் சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கிறிக்கட் சீருடைகளை வழங்கி வைத்தார்.





Sunday, August 23, 2015

என்னப்பா சொந்தங்களை இப்படிப் பண்றீங்களே....


மன்னிக்க மட்டும் கற்றுக் கொள் ஏனென்றால் , நம்மை ஏமாற்றியவர்கள் நம்மால் நேவிக்கப்பட்டவர்கள்.....


உலகம் உன்னை அறிவதை விட , உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள் - அப்துல் கலாம்


வாருங்கள் மட்டக்களப்பு இரும்பு பாலத்தின் கதை கேட்போம்....

இதுதான் ஆங்கிலேயர்களால் 1925ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ
அன்று நடந்த சுவை யான சம்பவம் ஒன்று
பாலத்தை திற்நதபின்னர் உயர் அதிகாரி கூறினார். இந்தப்பாலத்திலிருந்து குதித்து நீந்திவரும் ஒருவருக்கு அவர் கேட்கும் பரிசை தருவேன் என்றார். காரணம் அந்த நேரத்தில் ஆறு அகலமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இந்தச்சவாலை எவ்வாறு, யார் ஏற்பது, துணிவது என்று அங்குமிங்கும் பார்ததுக் கொண்டிருந்தனர். ஜனத்திரள் யார் அந்த தைரியசாலை ஆண்சிங்கம் என்று யோசிக்கின்றனர். ஒருவரும் முன்வரவில்லை என்றே முடிவுக்கு வந்தனர். இருப்பினும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனப் பாய்ந்து நீந்துகின்றார். ஜனங்களால் நம்படமுடியவில்லை. எவ்வளவோ இளைஞர்கள், வாலிபர்கள், குடும்பஸ்தர்கள் இருந்தும் இந்தமனிதனா என்ற ஆரவாரம் கரகோசம் வானைப் பிளக்கிறது. மனிதர் சற்று பதற்றத்துடனும் களைப்புடனும் மரணப்பயத்துடனும் அரங்கிற்கு வருகின்றார்.
ஆங்கிலேயர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அவர்களுக்க வாழ்த்துவதற்கு இனி வார்த்தையில்லை. அப்படி வாழ்த்து தள்ளுகின்றனர். எல்லாம் முடிந்ததன் பின்னர் அந்த அதிகாரி கேட்கின்றார். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும். இந்த நாட்டை வேணும்னாலும் தருவேன் என்றார்.
அந்த வயோதிபர் கூறினார் இன்னும் களைப்புத் தீராமல் எனக்கு ஒண்ணும் வேணாம். என்னைப் பிடித்துத்தள்ளிய அந்த ஒரு சில மோசமான வார்த்தைகளுடன் அவள்ளமகனை கொஞ்சம் பிடித்துத்தரணும் என்றார். விசயம் தெரிந்ததா, அவரை யாரோ ஒருவன் பிடித்துத் தள்ளியிருக்கின்றார்.

Saturday, August 22, 2015

என்னை அழவைப்பதில்தான் உனக்கு சந்தோசம் என்றால்....


தேர்தலில் தோல்வியுற்ற புத்தளம் நவவிக்கு தேசியப்பட்டியலை விட்டுக் கொடுத்த நல்லமனம் படைத்த ஜெமீல்



" தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான அனுமதியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது கட்சிக்கு வழங்கியிருந்தார். அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எம்.எச்.எம்.நவவி தெரிவு செய்யப்பட்டார்.
அதே வேளை தேசிய பட்டியிலில் முதலாவதாக எம்.ஜெமீலின் பெயரே பரிந்துரைக்கபட்டிருந்த நிலையில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தின் அவசியம் கருதி அதனை ஜெமீல், எம்.எச்.எம்.நவவிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தமை ஒரு முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தின் அடித்தளமாகும்.
- அமைச்சர் றிசாத் பதியுதீன் -
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்....