Thursday, December 25, 2014

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 4,66,221 பேர் தகுதி

( நமது நிருபர்)
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் 6800 அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டடியலின்படி 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில்
4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும் இம்முறை 24 ஆயிரத்து 934 பேரால் இத் தொகை அதிகரித்துள்ளது.
இதன் பிரகாரம் இம்மாவட்டத்தில் 464 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், 548 கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும், இதற்கு மேலதிக பணிகளுக்காக சிறு தொகையினரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 6800 பேர் கடமையாற்றவுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில்  ஆகிய 4 தொகுதிகளிலும் 464 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மாந்துறை தொகுதியில் 87 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தொகுதியில் 151 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும், அம்பாறை தொகுதியில் 160 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான நீல் த அல்விஸ் தெரிவித்தார்.
வாக்கு பெட்டிகளை வழங்குவது தொடக்கம் பெறுவது வரையும் மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலே இம்முறையும் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment