Saturday, December 27, 2014

சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம்



( நமது நிருபர்)  

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம்,கடல் கொந்தளிப்பு  மற்றும்   சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம் தோன்றியுள்ளது.
ஒலுவில் வெளிச்ச வீட்டை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளபாரிய கடலரிப்பு காரணமாக  தென்னந் தோட்டங்கள், மீனவர்வாடிகள் மற்றும் கட்டடங்கள் என்பன கடல் அலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் பாதையும்முற்றாக சேதமுற்றுள்ளது.
கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் மிக மோசமான கடலரிப்பு ஏற்படுவதோடுஇக்கடலரிப்பைத் தடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென  பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.




அறிவிப்பாளரும் கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய ” குரலாகி ” கவிதை ஒலி - ஒளி இறுவட்டு அறிமுக விழா



( நமது நிருபர்கள்)
மருதம் கலைக்கூடல் மன்ற ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதியகுரலாகிகவிதை ஒலி - ஒளி இறுவட்டு அறிமுக விழா கடந்த வெள்ளிக்கிழமை கலைக்கூடல் மன்ற தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் மஜீட் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் , சிரேஸ்ட வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளரும் அதிபருமான .ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இறுவட்டின் முதல் பிரதியினை பிரபல தொழிலதிபர் எம்.எச்.நாஸர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வினை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாப பிறை எப்.எம்.அறிவிப்பாளர் .எல்.நயீம் தொகுத்து வழங்கினார்.