Thursday, November 27, 2014

வழி மேல் பழி !



வழி மேல் பழி !

போன வழியை புரட்டி எடுக்கிறார்கள்
ஒரு யானை கடந்ததெனச் சொல்லி

ஒரு திருவிழா யானை
இரவிலே தனியாய்
தெருவிலே விரைந்து
மறைந்தது

மாளிகை வாசம் வெறுத்ததோ
மாலையும் கிரீடமும் தவிர்த்ததோ

அது போனது பேரிழப்பு
போன வழியை
புரட்டி எடுக்கிறார்கள்

இந்த வழி என்ன சொல்லும்
இந்த வழி என்ன செய்யும்

விழியும் தூங்காமல்
பழியும் தாங்காமல்
நலிந்து கிடக்கிறது நீண்டு

யானை வனவாசம் போன கதை
அது சொல்வதில்லை யாருக்கும்

புரட்டி எடுக்கிறார்கள்
போன வழியை


- எச் . ஏ. அஸீஸ்

21 நவம்பர் 2014

No comments:

Post a Comment