Tuesday, November 11, 2014

நிந்தவூர் பிரதேச கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான உயர் மட்டக் கூட்டம்


 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் -  நிந்தவுர் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களை உள்ளடக்கி, நிந்தவூரின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பான உயர் மட்டக் கூட்டம் அண்மையில்   நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

 நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.பைசால் காசீம், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி.ஆரீப் சம்சுதீன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி..நிசாம், நிந்தவூர் கல்வி அபிவிருத்திக் குழு முக்கியஸ்தர்களான  பொறியிலாளர் வை.எல்.நயீம், பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் , அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி அதிபர் .எல்.லத்தீப் உள்ளிட்ட கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், எனப் பலரும் இதில் கலந்து கொணடனர்.
எதிர் காலத்தில் கல்வி எழுச்சிக்கான சில திட்டங்களையும், அடிப்படை வசதிகளில் பல மாற்றங்களையும் செய்து, நிந்தவூர்ப் பிரதேசத்தின் கல்வி எழுச்சியை மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களினூடாக மேலோங்கச் செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை முன்னெடுத்துச் செல்வதற்கு இப்பிரதேச அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி..நிசாம் தெரிவித்தார்.




No comments:

Post a Comment