( ஏ.எல்.ஏ.றபீக்
பிர்தௌஸ் – நிந்தவுர் )
அம்பாறை,
சம்மாந்துறை சென்னல் கிராமத்திலுள்ள ஜனாதிபதி
கலாசார விளையாட்டு கட்டடத் தொகுதியில், சர்வதேச
தரத்திலான 400 மீற்றர் தடகள மைதானம்
அமைப்பதற்கான அங்குரார்பண நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச
செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில்
இன்று நடைபெற்றது.
கிழக்கு
மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை
விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் எடுத்துக்கொண்ட துரித
முயற்சியின் பயனாக மத்திய அரசின்
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகேவின் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்
இந்த மைதானத்தின் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக
இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்த
கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இந்த ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டடத்
தொகுதியை மறைந்த அமைச்சர் மர்ஹூம்
எம்.ஐ.அன்வர் இஸ்மாயில்
12 ஏக்கர்
நிலத்தில் சர்வதேச தரத்திலான மைதானத்துடன்
கூடிய ஒரு நிலையமாக பாரிய
சவால்களுக்கு மத்தியில் தோற்றுவித்தார்.
ஆனால்,
அவருடைய மறைவிற்று பின்னர் இந்த நிலையத்தில்
அமையப் பெறவிருந்த மைதானத்தின் பணிகளை இடைநிறுத்திவிட்டு
அதனை இந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்
ஒருவரின் தலையீட்டுடன் அந்த மைதானம் அக்கரைப்பற்றுக்கு
மாற்றப்பட்டு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பாக மத்திய அரசின் விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகேயுடன் கலந்துரையாடிய போது இந்த விடயங்கள்
அறிந்து கொள்ள முடிந்தது.
அந்த விடயம் அவ்வாறு இருக்க
இந்த
ஜனாதிபதி கலாசார விளையாட்டுத் தொகுதியை
உருவாக்கிய அரசியல் தலைவர்களின் கனவை
நனவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்
கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே, இந்த மைதானத்தின் முதற்கட்ட
பணிகளை ஆரம்பிக்க 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
இதற்காக
மத்திய அரசின் அமைச்சர் மஹிந்தானந்த
அளுக்கமகே மற்றும் அமைச்சுக்கும் நான்
சம்மாந்துறை மக்கள் சார்பாக நன்றி
தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு
தான் சம்மாந்துறையின் வளங்களையும் இங்குள்ள சில நிறுவனங்களையும் சூரையாடுவதற்காக
இன்னும் சிலர் கங்கனம் கட்டியுள்ளனர்
எமது பிரதேசத்தில் பல ஆண்டுகளாக இயங்கி
வந்து கொண்டிருக்கின்ற சிலியற் என்ற உயர்
கல்வி நிறுவனத்தை எமது பிரதேசத்தைவிட்டு அகற்ற
சில விசமிகள் செயற்பட்டு வந்தனர் இன்னும் செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
அந்த நிறுவனத்தில் இருந்து கொண்டே சிலர்
இன்னும் சில நயவஞ்சக செயற்பாடுகளை
செய்து வருகின்றனர் அவர்கள் தொடர்பாக நானும்
எமது பிரதேச மக்களும் விளிப்பாக
இருந்து வருகின்றோம் .சரியான நேரத்தில் அவர்களுக்கு
பாடம் கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மன்சூர்
தெரிவித்தார்.
இந்த விடயத்தில் என்னுடன் இணைந்து இந்த நிறுவனத்தை
பாதுகாப்பதிலும் இங்கு அதனை நிரந்தரமாக
நிறுவுவதிலும் உறுதியாக இருந்து வருகின்ற சிலியற்
நிறுவனத்தின் இணைப்பதிகாரி என்.எம்.கே.கே.நவரத்னாவுக்கு நான்
நன்றி கூறிக் கொள்கின்றேன். அந்த
நிறுவனம் எமது இந்த பிரதேசத்திலுள்ள
இரண்டு ஏக்கர் காணியில் மிகவிரைவில்
நிரந்தர கட்டடமாக அமையப் பெறவுள்ளது எனவும்
தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்
எம்.எஸ்.சஹூதல் நஜீம்,
வைத்திய அத்தியட்சகர் எஸ்.எம்.அப்துல்
அஸீஸ், பிரதேச சுகாதார வைத்திய
அதிகாரி எம்.எம்.சபீர்,
பிரதேச மின்சார பொறியியலாளர் பெரேரா,
கிழக்குமாகாண விளையாட்டுத்துறை பிரதிப் பணிப்பாளர் விமலரத்ன,
நீர்பாசண பொறியியலாளர் பிர்னாஸ், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
ஜயந்த தஹனக்க, சம்மாந்துறை ஜம்யியதுல்
உலமா சபையின் தலைவர் மௌலவி
அப்துல்காதர், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர்
எம்.வை.எம்.முஸ்தபா
உட்பட பல அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.