Thursday, October 30, 2014

பால்நிசைார் வன்முறைகளை ஒழிப்பதற்கான மற்றும் இனவிருத்தி , சுகாதாரம் சம்பந்தமான கருத்தரங்கு


( நமது நிருபர்)
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணி காரைதீவு பெண்கள் நிலையத்துடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர கலை , விஞ்ஞான , தொழில்நுட்ப மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த ” நாம் வன்முறையற்ற சமாதானமான சூழலை கட்டியெழுப்புவோம் ” எனும்
தொனிப் பொருளிலான ” பால்நிலைகள் வன்முறைமுறைகளை ஒழித்தல் , இனவிருத்தி  மற்றும்  சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மனநல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நவ்பல் பிரதம வளவாளராக கலந்து கொண்டதுடன்  காரைதீவு பெண்கள் நிலையத்தின் முகாமையாளர்களான திருமதி ஏ.எம்.எஸ்.ஜுமானா , திருமதி கே.நிஸாந்தினி , கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஏ.ஆதம்பாவா , பிரதி அதிபர்களான ஏ.எம்.எச்.அமீன் , யு.எல்.எஸ்.ஹமீட் மௌலவி , ஆசிரியர் மௌலவி ஏ.எம்.அன்சார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment